TamilSaaga

“சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டம்” – அழகிய வீடியோ வெளியிட்ட லிட்டில் இந்தியாவின் LiSHA குழுமம்

நமது சிங்கப்பூர் பல கலாச்சாரங்கள் இணைந்து வாழும் நாடு. அதில் தமிழர்களின் பங்கும் மிகவும் அதிகம் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. இந்நிலையில் உலக அளவில் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்படும் தீப ஒளி திருநாளாம் தீபாவளி கொண்டாட்டங்கள் தற்போது நமது சிங்கப்பூரிலும் தொடங்கிவிட்டது. குறிப்பாக சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதி பல்வேறு கலைநிகழ்ச்சிகளோடும், வண்ண விளக்குகளோடும் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தயாராகிவருகிறது.

இதுகுறித்து லிட்டில் இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் LiSHA என்று அழைக்கப்படும் LITTLE INDIA SHOPKEEPERS AND HERITAGE ASSOCIATION ஒரு ரம்யமான காணொளியுடன் தீபாவளி கொண்டாட்டங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. “ஆன்லைன் மூலமாகவும், லிட்டில் இந்தியா சிங்காப்பூரிலும் தீபாவளி 2021 கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன” வருகின்ற “செப்டம்பர் 25 முதல் வண்ண பண்டிகை விளக்குகளால், தெருக்களும் கடைகளும் ஒளிரவிருப்பதை காண லிட்டில் இந்தியாவுக்கு வாருங்கள்!” லிட்டில் இந்தியாவின் அனைத்து கடைக்காரர்கள் மற்றும் உணவகங்கள் நம்பமுடியாத தீபாவளி சலுகைகளோடு அழகான ஆடைகளை வாங்கவும் மற்றும் சுவையான உணவை உண்ணவும் வாருங்கள்”

லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்

“உங்களுக்கு பிடித்த தமிழ் பாடல்களை பாடி, மகிழ்ச்சியாக நடமாடி, உங்கள் புகைப்பட திறமைகளை வெளிக்காட்டி, அழகான பரிசுகளால் உங்கள் இல்லங்களை அலங்கரிக்க வருகைதாருங்கள்” வீட்டில் இருந்தபடியேயும் எங்கள் நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள்” என்று LiSHA வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் அடுத்த ஆண்டு பொங்கல் வரை நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபி மக்கள், வட இந்திய மக்கள் மற்றும் நமது தமிழர்கள் இந்த ஆண்டு லிட்டில் இந்தியாவில் தங்கள் கடைகளை போடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற ஆண்டு நோய் பரவல் அதிகம் இருந்த காரணத்தால் வண்ண விளக்குகள்ஜொலித்தாலும் கடைகள் பெரிய அளவில் போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை பாட்டு போட்டி, நடனப்போட்டி, புகைப்பட போட்டி என்று பல போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பட்டு செய்யப்பட்டு வருகின்றது. விடுதிகளில் தனிமையில் வாடும் தொழிலாளர்களுக்கும் சிறப்பான பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

Related posts