TamilSaaga

வெறும் 10 நாள்.. ஈட்டியது 7.5 மில்லியன் – அசத்தும் சிங்கப்பூர் அழகி : இணையத்தில் இவ்வளவும் சாத்தியமா? ஆமா அப்படி என்ன செஞ்சாங்க?

சில வாரங்களுக்கு முன்பு இந்தோனேஷியா இளைஞர் ஒருவர் OpenSea என்ற தலத்தில் தனது selfieகளை விற்று அதன் மூலம் சுமார் 1 மில்லியன் அமரிக்கா டாலர்களை சம்பாரித்த விஷயத்தை நாம் வாசித்திருப்போம். இந்நிலையில் NFT எனப்படும் Non Fungible டோக்கன்கள் மூலம் சிங்கப்பூரை சேர்ந்த சீன பெண் ஒருவர் வெறும் 10 நாட்களுக்குள் சுமார் S$7.5 மில்லியனுக்கு மேல் ஈட்டியுள்ளார் என்பது தான இப்பொது Talk of Town. Non Fungible டோக்கன்கள் பற்றி இன்றளவும் உலகளாவிய அளவில் வெகு சிலருக்கே பரிச்சயமாக உள்ளது என்றால் அது சற்றும் மிகையல்ல.

இதையும் படியுங்கள் : குடும்பம் காக்க சிங்கப்பூர் வந்த “தமிழக தொழிலாளி” : பணியிட விபத்தில் பறிபோன கால் – சிங்கப்பூர் கைவிடவில்லை

NFT என்பது இணையத்தில் விலைக்கு விற்கப்படும் ஒரு புகைப்படத்தை அல்லது ஒரு காணொளியை குறிக்கும். இந்த வகையில் தான் சிங்கப்பூரில் வசிக்கும் சீன பெண் Yuqing Irene Zhao என்பவற்றின் புகைப்படம் சார்ந்த NFTகள் பெரிய அளவில் விற்பனையாகி வருகின்றன. தற்போது OpenSea என்ற அந்த தலத்தில் Irene DAO என்ற அவருடைய கணக்கில் சுமார் 1,107 பதிவுகள் உள்ளன, அதாவது விளம்பரப்படங்கள் உள்ளன. தற்போது, ​அவருடைய கணக்கில் உள்ள ​மலிவான NFT, “Have Fun Staying Poor” என்பது தான். அதை விலை சுமார் 0.94 Ethereum. Ethereum என்பது புழக்கத்தில் உள்ள ஒரு Crypto Currency, இது தோராயமாக S$3,000 மதிப்புடையது.

மேலும் அந்த பெண்ணுடைய மொத்த கணக்கில் மொத்த வர்த்தக அளவு சுமார் 2,300 Ethereum வரை இருக்கும் என்று நம்பப்படுகிறது, இது குறைந்தபட்சம் S$7.5 மில்லியனுக்கு சமம் என்பது தான் உண்மை. சிங்கப்பூர், இந்தியா உள்பட தற்போது இந்த Crypto Currency மீதுள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. உலக அளவில் பல பரிவர்த்தனைகள் இந்த Crypto Currency மூலம் நடைபெறுகிறது என்றால் அது மிகையல்ல. இந்த சேகரிப்பு அனைத்தும் ஜாவோவிற்கு (28) சொந்தமானது.

இதையும் படியுங்கள் : “48 சதவிகிதம் ஊதிய உயர்வு” – சிங்கப்பூரில் நீங்கள் “இந்த” துறையில் வேலை செய்தால்? MOM உங்களுக்கு தரும் “Good News” இதுதான்

ஜாவோ கடந்த 2017ல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் மற்றும் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் Cryptoவில் ஈடுபடுவதற்கு முன்பு ஒரு சரக்கு தரகராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இவருடைய படங்கள் டெலிகிராமில் ஸ்டிக்கர் வடிவமாக தொடங்கின, ஆனால் டெலிகிராமில் அவரை பின்பற்றிய பல ரசிகர்கள் அதை NFT தொகுப்பாக மாற்ற பரிந்துரைத்தார்கள். அதன் விளைவு இன்று பல மில்லியன்களை அவர் சம்பாரித்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts