TamilSaaga

தீபாவளி அன்று சிங்கப்பூர் தம்பதியினருக்கு கிடைத்த வாழ்நாள் பரிசு… மகாலட்சுமியை மகளாக வரவேற்ற சந்தோஷத்துடன் குடும்பத்தினர்!

தீபாவளி அன்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்ந்து இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். ஆனால் சிங்கப்பூரில் வாழும் தம்பதியினருக்கு தீபாவளி என்று வாழ்நாள் பரிசாக விலையில்லாத உயர்ந்த பரிசு கிடைத்துள்ளது. என்னவென்று யோசிக்கின்றீர்களா? தீபாவளி அன்று அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர் சிங்கப்பூரைச் சேர்ந்த ரதி ரோஷினி- தியாகு சுப்பிரமணியம்.

தம்பதியினருக்கு நவம்பர் மாத இறுதியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக தீபாவளி அன்று குழந்தை பிறந்துள்ளது. தற்செயலாக கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்கு சென்ற பொழுது குறிப்பிட்டு சில மருத்துவ காரணங்களுக்காக அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது சனிக்கிழமை அன்று பிறக்க வேண்டிய குழந்தை சிறிது நேரம் தவறி தீபாவளி அன்று பிறந்து குடும்பத்தினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இதையொட்டி அவர்கள் உறவினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து தாயையும் குழந்தையும் சந்தித்து மகிழ்ச்சியுடன் தீபாவளி வாழ்த்து பகிர்ந்து கொண்டனர். இது குறித்து அவர்களது குடும்பத்தினர் கூறும்பொழுது தீபாவளி அன்று பொதுவாக லட்சுமி வழிபாடு செய்வது வழக்கம். ஆனால் மகாலட்சுமியே எங்கள் குடும்பத்திற்கு வந்துள்ளதாக உணர்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதனை ஒட்டி குழந்தையின் தந்தையான ராணுவத்தில் பணிபுரியும் தியாகு கூறும் பொழுது இந்த ஆண்டு தீபாவளிக்கு எனக்கு இரட்டிப்பாக மகிழ்ச்சி கிடைத்துள்ளது என நம்மிடம் பகிர்ந்து கொண்டார். குழந்தை பிறப்பிற்கு பிறகு நவம்பர் 13 அன்று வீட்டிற்கு வந்த குழந்தை மற்றும் தாயை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வரவேற்றனர்.

Related posts