TamilSaaga

“சிங்கப்பூரர்கள் அதிக பொருளாதார சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டும்” : மே தின உரை – பிரதமர் லீ அறிவிப்பு

சிங்கப்பூர், ரஷ்யா – உக்ரைன் போரின் தாக்கத்தை எதிர்கொண்டு நம் அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தாலும், வரும் ஆண்டில் சிங்கப்பூரர்கள் அதிக பொருளாதார சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியென் லூங் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே தின உரையில்) கூறினார்.

இதற்கான தீர்வு, நமது வணிகங்களை மாற்றியமைப்பது, நமது பொருளாதாரத்தை வளர்ப்பது, அனைவரையும் மேம்படுத்துவது தான் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அப்படி நாம் செய்வதால் நமது வருமானம் உயரலாம், மேலும் அது ஆற்றல் மற்றும் உணவுப் பொருட்களின் அதிக விலையை ஈடுகட்டஉதவும் என்றார்.

பிரதமர் லீ, டவுன்டவுன் ஈஸ்டில் நடைபெற்ற மே தினப் பேரணியில் தொழிற்சங்கவாதிகள் மத்தியில் உரையாற்றினார். அவர் தனது உரையில், சிங்கப்பூரர்கள் மீதான வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டினார்.

உலகின் ரியல் “KGF” சிங்கப்பூர்.. 200 வருடங்களாக உழைத்து சிங்கையை கட்டி எழுப்பிய “அசாத்திய” தமிழர்கள் – உழைப்பாளர்கள் தினமே தலைவணங்கும்!

பட்ஜெட் 2022ல் அறிவிக்கப்பட்ட $560 மில்லியன் குடும்ப ஆதரவுத் தொகுப்பும் இதில் அடங்கும், சேவை மற்றும் பாதுகாப்புக் கட்டணங்கள் தள்ளுபடிகள் மற்றும் சமூக மேம்பாட்டு கவுன்சில் வவுச்சர்கள் ஆகியவை கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களின் வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் நாணய ஆணையம் இறக்குமதி செய்யப்பட்ட பணவீக்கத்தைக் குறைக்க பணவியல் கொள்கையை கடுமையாக்கியுள்ளது, இது சிங்கப்பூர் டாலர் மதிப்பு உயர வழிவகுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நமது பொருளாதாரத்தை வலுவாகவும், மேலும் மீள்தன்மையுடனும் மாற்ற வேண்டும்” என்று பிரதமர் தனது உரையில் கூறினார். “வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டே இருங்கள், புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள், மேலும் போட்டி நிறைந்த பொருளாதாரமாக மாறுங்கள் என்று கூறி அனைவருக்கும் தனது மே தின வாழ்த்துக்களை கூறினார் லீ.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts