TamilSaaga

துவங்கியது இந்தியா – சிங்கப்பூர் VTL சேவை : விற்றுத் தீர்ந்த விமான டிக்கெட்டுகள்? – இன்னும் பல தகவல்கள் உள்ளே

ஏற்கனவே நமது சிங்கப்பூர் அரசு பல நாடுகளில் இருந்து மக்கள் இங்கு வருவதற்கு தனிமைப்படுத்துதல் இல்லாத முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட VTL என்ற சேவையை அளித்து வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே 15கும் அதிகமான நாடுகளுக்கு VTL சேவை இருந்து வரும் நிலையில் தற்போது சிங்கப்பூர் அதன் தடுப்பூசி பயணப் பாதை (VTL) திட்டத்தை இன்று நவம்பர் 29 முதல் மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) கடந்த நவம்பர் 15 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இதையும் படியுங்கள் : “மேலும் 6 நாடுகளுக்கு எல்லை நடவடிக்கைகளை கடுமையாக்குகிறது சிங்கப்பூர்”

இதன் அடிப்படையில் இன்று முதல் இந்தியா மற்றும் இந்தோனேசியாவுடன் VTL களையும், டிசம்பர் 6 முதல் கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகியவற்றுடன் VTL களை அறிமுகப்படுத்த சிங்கப்பூர் ஆவணம் செய்துள்ளது. பெருந்தொற்று பல அமைச்சக பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், சிங்கப்பூரும் இந்தியாவும் தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரமாக அங்கீகரிப்பது குறித்து மேலும் விவாதித்து வருவதாகக் கூறினார்.

சென்னை, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் VTL மற்றும் Non VTL சேவைகளை வழங்க, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், Scoot, Indigo, ஏர் இந்தியா உள்ளிட்ட 5 விமான சேவை நிறுவனங்கள் தமிழகத்தின் திருச்சி தலைநகர் சென்னை, இந்திய தலைநகர் டெல்லி மற்றும் ஹைதெராபாத், அம்ரிஸ்டர் போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இன்று முதல் இயக்கப்படவுள்ளன. Scoot நிறுவனம் 5,500 இந்திய ரூபாய் முதல் ஒரு வழி விமான டிக்கெட்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விமான சேவை விவகாரத்தில் indigo நிறுவனம் மிகச்சிறப்பாக செயல்பட்டதாக நமது தமிழ் சாகா சிங்கப்பூருக்கு மிக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைத்துள்ளது.

கவனிக்க… இந்த VTL சேவை குறித்து முழுமையான புரிதல் இன்றளவும் இல்லை என்றே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக VTL மூலம் இந்தியாவின் இருந்து சிங்கப்பூர் செல்லும்போது ஆவணங்கள் சரியில்லாமல் பயணம் நிறுத்தப்பட்டால் டிக்கெட் பெற செலுத்திய பணம் Refund கிடைக்குமா? போன்ற கேள்விகளுக்கு விமான சேவை நிறுவனங்களிடமே பதில் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் பயணிகள் முழு நம்பிக்கையோடு தங்கள் பயணத்தை இன்று மேற்கொள்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும் சரி சுமார் 400 நாட்களுக்கு பிறகு பல விமான சேவை நிறுவனங்கள் சிங்கப்பூர் இந்தியா இருமார்கமாக பறக்கவுள்ள நிலையில் நிச்சயம் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையோடு பயணிகள் தங்கள் பயணத்தை துவங்கியுள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts