சிங்கப்பூரில் அதிகமாக ஊழியர்கள் வேலை செய்வது Construction துறையில் தான். இங்கு இருக்கும் ஊழியர்களுக்கு வேலை கடினமாக இருந்தாலும் சம்பளம் அதிகமாக இருக்கும் என்பதாலும் ஓவர் டைம் நிறைய இருக்கும் என்பதாலும் நிறைய பேர் இந்த துறைக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். இந்த துறைகளில் வேலை எப்படி இருக்கும் இவர்களுக்கு ஒரு வருடத்தில் அதிகபட்சமாக சம்பளம் எப்படி இருக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Construction ஊழியர் பொதுவாக ஒரு கட்டுமான தளத்தில் வேலை செய்கிறார். அங்கு தச்சு, இடிப்பு, சுவர் பராமரிப்பு, பூச்சு வேலை மற்றும் கூரை போன்ற பல பணிகளுக்கு பொறுப்பாக செயல்படுவார்கள். construction ஊழியரின் வேலை நேரம் தேவைகளைப் பொறுத்து மாறுபடலாம். வேலை பொதுவாக பகலில் செய்யப்படுகிறது. இதனால் கடுமையான வெப்பம் மற்றும் குளிர் போன்ற கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
இதையும் படிங்க: சிங்கப்பூர் வேலைக்கு வரணுமா கண்டிப்பா இந்த course பண்ணணும்… Fail ஆனா நாடு திரும்ப வேண்டியது தான்
Construction ஊழியர்கள் வேலை காலக்கெடுவைப் பொறுத்து நீண்ட நாட்கள், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட வேலை செய்யலாம். சில Construction ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட திறமையில் நிபுணத்துவம் பெற்றாலும், அனைத்து பிரிவுகளிலுமே வேலை செய்வதையே வாடிக்கையாக வைத்து இருக்கின்றனர்.
கட்டிடப் பொருட்களை இடிப்பது, ஏற்றுவது மற்றும் இறக்குவது, பொருத்தமான பகுதிகளுக்கு பொருட்களை விநியோகிப்பது, சிறிய கருவிகளை இயக்குவது, இயந்திர பராமரிப்புக்கு உதவுவது மற்றும் ஜாக்ஹாமர்கள் மற்றும் டார்ச்கள் போன்ற உபகரணங்களை இயக்குவதற்கும் அவர்கள் உதவலாம்.
பெரும்பாலான நேரங்களில், Construction ஊழியர்கள் முறையான கல்வியைப் பெற வேண்டிய அவசியமில்லை, இருப்பினும் Multi skill சான்றிதழைப் பெற இன்ஸ்டியூட்கள் சென்று படிக்க வேண்டி இருக்கும். பெரும்பாலான வேலைகள் நெருக்கமான காலக்கெடுவில் செயல்படுவதால், Construction ஊழியர்கள் நேரத்துக்குச் செயல்படுவது முக்கியம்.
Construction ஊழியர்கள் சம்பளம் சராசரியாக வருடத்திற்கு 9000 சிங்கப்பூர் டாலர்கள் வரை இருக்கும். மேலும் ஒரு அறிக்கையின் படி சிங்கப்பூரில் அதிகபட்சமாக சிங்கப்பூர் construction ஊழியர் வாங்கும் சம்பளம் வருடத்திற்கு 24000 சிங்கப்பூர் டாலராக இருக்கிறது. குறைந்தபட்சமாக 641 சிங்கப்பூர் டாலர் கொடுப்பதாக தெரிவிக்கிறது.
Construction ஊழியர்கள் உங்கள் ஊதியத்தை அதிகரிப்பது பல வழிகளில் சாத்தியமாகும்.
*உங்கள் திறமைக்கு ஏற்ப அதிக கட்டணம் செலுத்தத் தயாராக இருக்கும் புதிய கம்பெனிக்கு மாறலாம்.
*இந்த துறைகளில் சம்மந்தப்பட்ட கோர்ஸ் படித்தால் அதற்கேற்ப ப்ரோமோஷன்கள் கிடைக்கும்.