TamilSaaga

ஏஜென்ட்டிடம் பல லட்சம் கொடுத்து சிங்கப்பூர் வர இருக்கீங்களா? உங்களிடம் இந்த திறமை இருந்தாலே போதும்… செம வேலையில் செட்டில் ஆகிடலாம்… குடும்ப கஷ்டமும் பஞ்சா பறந்துடுமாம்

சிங்கப்பூரில் ஏகப்பட்ட பாஸ்கள் நடைமுறையில் இருக்கிறது. இதில் படித்தவர்களும், படிக்காதவர்களும் ஒவ்வொரு நாளும் பல ஆசையுடன் சிங்கப்பூர் விமான நிலையத்தில் வந்திறங்குவது வாடிக்கையாக தான் இருக்கிறது. படித்தவர்களுக்கு ஒரு வகையான பாஸும், படிக்காதவர்களுக்கு ஒரு வகையான பாஸும் வழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இந்த திறமை இருந்தால் நீங்களும் வொர்க் பாஸிலேயே சிங்கப்பூர் வேலைக்கு வர முடியும்.

சிங்கப்பூர் போலீஸ் துறையால் வழங்கப்பட்ட CAT 1 பொது பொழுதுபோக்கு லைசன்ஸை வைத்திருக்கும் நிறுவனத்தில் பெர்மாமிங் ஆர்டிஸ்ட்டாக வேலைக்கு சேர முடியும். ஒரு நாளைக்கு கண்டிப்பாக 6 மணி நேரம் செயல்பட வேண்டும். பார், டிஸ்கோதேக், லவுஞ்ச், நைட் கிளப், பப், ஹோட்டல், தனியார் கிளப் அல்லது உணவகம் என்பதாக இருக்கலாம். கண்டிப்பாக சொந்த நாட்டினை சேர்ந்த ஒரு ஊழியரை வேலைக்கு வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் உங்களுக்கு உடனே வேலை வாங்கணுமா? அதுக்கு Higher Skill தான் இருக்கணும்… நச்சுனு நாலு வழி இருக்கு! வாழ்க்கையும் ஜம்முனு இருக்கும்!

சின்ன நிறுவனத்தில் வேலைக்கு 8 வெளிநாட்டு ஊழியர்கள் வரை எடுக்கலாம். பெரிய நிறுவனங்களில் 12 வெளிநாட்டு ஊழியர் வரை வேலைக்கு எடுக்கலாம். முதல் 8 ஊழியர்கள் வரை $450 சிங்கப்பூர் டாலரும், 9வது ஊழியரில் இருந்து $750 சிங்கப்பூர் டாலர் லெவி கட்டப்பட வேண்டும்.

பெர்மாமிங் ஆர்டிஸ்ட் குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 6 மாதங்கள் மட்டுமே வொர்க் பெர்மிட்டில் இருக்கலாம். இந்த பெர்மிட்டில் இருந்து வரும் போது வெளிநாட்டில் நடிக்கும் கலைஞர்கள் பாடுதல் மற்றும் நடனம் போன்ற மேடை நிகழ்ச்சிகள் தொடர்பான வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும். அதே பிஸினஸில் வேறு எந்த வேலைகளையும் செய்ய அவர்களை ஈடுபடுத்த முடியாது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை செய்ய போறீங்களா? PCM permit பெஸ்ட்டா? Skill வொர்க் பெர்மிட்டில் போறது பெஸ்ட்டா?

இதற்கு அப்ளிகேஷன் கட்டணமாக $75 சிங்கப்பூர் டாலர் கேட்கப்படும். பாஸ் அப்ரூவ் ஆனவுடன் $100 சிங்கப்பூர் டாலர் தரப்பட வேண்டும். அனைத்து சான்றிதழ்களும் கொடுக்கப்பட்டு ஒரு வாரத்தில் பெர்மிட் கிடைத்து விடும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts