TamilSaaga

குடும்பம் காக்க வெளிநாட்டு பயணம்..எதிர்பார்ப்புடன் வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அதிகம் ஜெயிக்க வைப்பது சிங்கப்பூரா? மலேசியாவா?

நமது சிங்கப்பூர் மட்டுமல்ல அண்டை நாடான மலேசியாவும் பெரும்பாலும் பிற நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களை சார்ந்திருக்கின்றன… சரி அப்படி ஒரு நிலை இருக்கையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை சிறந்த நாடு எது… சிங்கப்பூரா அல்லது மலேசியாவா… விரிவா பார்க்கலாம் வாங்க..!

வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

சிங்கப்பூரும் மலேசியாவும் வெளிநாட்டு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. சமீபகாலங்களில் இப்படி இந்த நாடுகளுக்கு அதிகம் இடம்பெயரும் தொழிலாளர்கள் `Low-Skilled’ எனப்படும் உடல் உழைப்பு தொழிலாளார்கள்தான் அதிகம். இந்த நாடுகளில் தற்போது வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் முன்னொர்கள் பலர் சீனா, இந்திய துணைக்கண்டம் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம்.

இந்த நாடுகள், தங்கள் பொருளாதார மற்றும் குடியேற்றக் கொள்கைகளை இப்படியாக அதிகரித்து வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கணக்கில் கொண்டே வடிவமைக்கின்றன. அந்த நாடுகளின் கொள்கைகள் வடிவமைப்பில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என்ற அம்சம் தவிர்க்க முடியாத அம்சமாக தவறாமல் இடம்பிடிப்பதை நம்மால் பார்க்க முடியும். ஆசிய நாடுகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை அதிகம் சார்ந்திருப்பது இந்த இரு நாடுகள்தான்.

ஏன் சிங்கப்பூர் – மலேசியா?

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் குடியேற்றம் ஆகியவை பற்றி பேசுவதற்கு முன்னால், ஏன் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் மட்டும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பெருமளவில் சார்ந்திருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. 1980-களின் இறுதியில் ஜப்பான், சீனா, கொரியா மற்றும் தைவான் போன்ற ஆசிய நாடுகள் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அனுமதிப்பதில் கெடுபிடியான கொள்கைகளை உருவாக்கி, நடைமுறைக்குக் கொண்டு வந்தன. இதனால், அந்த நாடுகளை நாடிச் செல்லும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையத் தொடங்கியது.

ஜூரோங் பகுதியில் இரவு முழுதும் கொட்டித்தீர்த்த கனமழை.. சிங்கப்பூரில் நேற்று சுழன்று வீசியதா சூறாவளி? – வானிலை ஆய்வு மையம் கொடுத்த விளக்கம்

குறிப்பாக, மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளைக் கொண்ட ஜப்பான், Closed Market’ என்றே இந்த காலகட்டங்களில் அடையாளப்படுத்தப்பட்டது. சீனாவின் கதையோ வேறுவிதமாக இருந்தது. உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட சீனா, உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கே திண்டாடிக் கொண்டிருந்தது. இந்த சூழலில், ஆசிய நாடுகளில் உடல் உழைப்பு உள்ளிட்ட தொழிலாளர்களை அதிகம் கொண்ட இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் கவனம் உலகின்Open Market’ என்று அறியப்படும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் மீது இயல்பாகவே விழுந்தது.

குறிப்பாக, 1990-களின் இறுதி தொடங்கி 2000-களின் தொடக்க ஆண்டுகளில் இந்த நாடுகள் வகுத்த கொள்கைகளும் அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தன என்பது கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு அம்சமாகும்.

1990-களின் இறுதியில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில், மொத்த மக்கள் தொகையில் 24% ஆகவும், மலேசியாவில் 5.6% ஆகவும் இருந்தது. இதே சமயத்தில் ஜப்பானில் 0.9%, தைவானில் 0.2% மற்றும் கொரியாவில் 0.1% ஆகவும் இருந்ததாகச் சொல்கிறது புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஒன்று. இதே சமயத்தில் ஐரோப்பியக் கண்டத்தில் இந்த எண்ணிக்கை சுமார் 7% ஆக இருந்தது.

ஹாங்காங்கிலோ 38% என்ற அளவில் மிக அதிகமாக அந்த காலகட்டத்தில் இருந்தது. 2013-ல் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் தாறுமாறாக எகிறியிருக்கிறது. இதற்குக் காரணம், அந்த நாடுகள் வகுத்த கொள்கைகள். 2013-ம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூர் மக்கள் தொகையில் புலம்பெயர் தொழிலாளர்களின் சதவிகிதம் என்பது 43% ஆகவும், மலேசியாவில் 8.3% ஆகவும் இருந்திருக்கிறது. நாம் கணக்கில் எடுத்துக்கொண்ட மற்ற ஆசிய நாடுகளில் இந்த எண்ணிக்கை 3% என்ற அளவைக் கூட தாண்டவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளர்களின் சொர்க்கம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஜப்பான் உள்ளிட்ட மற்ற ஆசிய நாடுகள் பெருவாரியான வாய்ப்புகளை வழங்காத நிலையில், சிங்கப்பூரும் மலேசியாவும் இருகரம் விரித்து அவர்களை வரவேற்று அரவணைத்துக் கொண்டன என்றே சொல்லலாம். 1990-களுக்குப் பிறகு இந்த நாடுகள் வகுத்த கொள்கைகள் புலம்பெயர் தொழிலாளர்கள் இவைகளைத் தேர்வு செய்ய முக்கியமான காரணிகளாக அமைந்தன. இந்த காலகட்டத்தில் மலேசியாவில் குடியேறியவர்களில் அதிகமானோர் 15-29 வரையிலான மாணவர்கள் கேட்டகிரியே அதிகம். ஆனால், சிங்கப்பூரிலோ, 30-64 வயது வரையிலான தொழிலாளர்கள் கேட்டரிகிரிதான் அதிகம்.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு வழக்குகள்.. 4 மாதத்தில் 5500 பேர் பாதிப்பு – அமைச்சர் Grace Fu எச்சரிக்கை

அதேநேரம், புலம்பெயர் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்களின் எண்ணிக்கை 1990-களில் 27% ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை 2013-ல் 45% ஆக அதிகரித்திருக்கிறது. சீனாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்த காலகட்டத்தில் 21%-த்தில் இருந்து 16% ஆகக் குறைந்திருக்கிறது. வேறெந்த தனி நாட்டைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் 7% என்ற எண்ணிக்கையைத் தாண்டவில்லை. இந்தியா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை மொத்தமாக இந்த காலகட்டத்தில் 7%-த்தில் இருந்து 18% ஆக உயர்ந்திருக்கிறது என்கிறது ஆய்வறிக்கை ஒன்றின் புள்ளிவிவரம். மலேசியாவைப் பொறுத்தவரை புலம்பெயர் தொழிலாளர்கள் என்றால் இந்தோனேசியர்களின் ஆதிக்கமே அதிகம். 1990-களில் 36% ஆக இருந்த இவர்களின் எண்ணிக்கை 2013-ல் 43% ஆக உயர்ந்திருக்கிறது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்களிப்பு

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைப் பொறுத்தவரை உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது, அந்தந்த நாடுகளின் மக்கள் தொகை அதிகரிப்பில் புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கையை விட கணிசமாக அதிக எண்ணிக்கை கொண்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சிங்கப்பூரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்களிப்பு என்பது 2000- 2005 இடைப்பட்ட காலத்தில் 27-29% ஆகவும், 2008-2014 காலத்தில் 35-39% ஆகவும் இருந்தது. இதுவே மலேசியாவில் 2000-த்தில் 9% ஆகவும், 2005-2009 இடைப்பட்ட காலத்தில் 18-19% ஆகவும், 2010-2012 காலகட்டத்தில் 12-15% ஆகவும், 2013 ஆம் ஆண்டில் 17% ஆகவும் இருந்திருக்கிறது.

சிங்கப்பூரில் 735கி ஹெராயின் கடத்தல்.. ஒரு பெண்மணி உள்பட 4 முதியவர்கள் கைது – “இரும்புக்கரம்” கொண்டு விசாரிக்கும் CNB

சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைப் பொறுத்தவரை, இரண்டு நாடுகளுமே ஒவ்வொரு வகையில் முந்தி நிற்பவை. பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்து சந்தை நிலவரம் வரையில் பல்வேறு அட்வாண்டேஜ்கள் இரண்டு நாடுகள் இடத்திலும் இருக்கின்றன. இந்தத் தரவுகளை வைத்து, வெளிநாட்டு அல்லது புலம்பெயர் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் எந்த நாடு அவர்களின் சொர்க்கமாக இருந்திருக்கிறது என்பது பற்றி நீங்களே முடிவுக்கு வரலாம்..!

இந்த செய்தி சில முக்கிய தரவுகளை ஆய்வு செய்த பிறகு வெளியிடப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts