TamilSaaga

உழைத்து, உழைத்து… 33 வயதில் கிடைத்த ஒரு பொக்கிஷ வாழ்க்கையை.. தன் கீழ்த்தரமான புத்தியால் இழந்த சிங்கப்பூரர் – ஒரு நொடியில் பேர், புகழ் அத்தனையும் காலி!

SINGAPORE: சிங்கப்பூரில் தனது தனித் திறமையால் இளம் வயதில் முன்னேறி, இன்று தனது ஒட்டுமொத்த நற்பெயரையும் இழந்து சிறைக்கு சென்றுள்ளார் Dee Kosh.

சிங்கப்பூரில் உள்ள அத்தனை ஆங்கில ஊடகங்களும் பார்வையும் Dee Kosh பற்றித் தான். “இவ்வளவு பிரபலமான ஆள், இப்படியொரு கீழ்த்தரமான காரணத்தால் வீழ்ந்துவிட்டாரே!” போன்ற பதிவுகள் அவர் மீது எந்தளவு மக்கள் அன்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

சரி.. யார் இந்த Dee Kosh?

Darryl Ian Koshy என்ற இயற்பெயர் கொண்டவர் Dee Kosh. சிங்கப்பூரில் மிகப் பிரபலமான யூடியூபர். 2011ல் தனது யூடியூப் பயணத்தை தொடங்கிய Dee Kosh, பிறகு ரேடியோவில் ஆர்.ஜே, நடிகர், பாடகர் என்று இவர் எடுக்காத ரூபங்கள் இல்லை. ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக இவர் காட்டிய ரூபம், விஸ்வரூபமாக உருவெடுத்து, இன்று அவரை சிறைக்கு அனுப்பிவிட்டது.

சமூக தளங்களில் இவரது வீடியோக்கள் சிங்கப்பூரில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகின. தமிழ் தெரிந்த சிலர் கூட, இவரது சேட்டைத்தனமான வீடியோக்களுக்கு ரசிகர்களாக இருந்தனர். இவரது காமெடி சென்ஸ் தான் இவரது ப்ளஸ். மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காட்டி, இவரை யூடியூபில் பிரபலமாக்கியதும் இந்த காமெடி சென்ஸ் தான்.

Gangnam Style பாடல் உங்களுக்கு நினைவிருக்கா…? தமிழ்நாடு வரை பட்டித் தொட்டியெங்கும் ஹிட்டடித்த பாடல் அது. அதனை தனது ஸ்டைலில் இவர் ரீகிரியேட் செய்து வெளியிட்ட வீடியோ, 3 மில்லியனுக்கும் அதிகமான Views பெற்றது.

ஏப்ரல் 2012 இல் தனது ரேடியோ வாழ்க்கையைத் தொடங்கினார். 98.7FM இன் ‘Say It With Music segment’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிறகு, mediacorp-ல் இருந்து வெளியேறி power 98 ரேடியோவில் இணைந்து, மெல்ல மெல்ல தனது வாழ்வின் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தார்.

யூடியூப் இவரை உச்சத்துக்கு கொண்டுச் செல்ல, மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால், விதி இவரது வாழ்க்கையில் சபலம் என்ற வடிவில் விளையாடியது. அதுவும் இளம் சிறார்கள் மீது தனது காமத்தை பாய்ச்சும் சபலக்காரராக உருமாறினார் Dee Kosh.

மேலும் படிக்க – தாய் இறந்தது தெரியாமல்… கட்டி அணைத்து உறங்கிய 3 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – கண்கலங்க வைத்த காட்சி!

2016 மற்றும் 2017 க்கு இடையில் கோஷ் தனது முதல் குற்றத்தைச் செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. தனக்கு பிடித்த சிறாரை வீட்டுக்கு அழைத்து வந்து, கேமராவை மறைத்து வைத்து, சல்லாபத்தில் ஈடுபடுவதை வீடியோவாக எடுத்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அந்த நபரை 2016 முதல் 2020 வரை கோஷ் தனது வீட்டில் பலமுறை வரவழைத்து உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார். சில சமயம் பணம் கொடுத்தும், சில சமயம் பணம் கொடுக்காமலும் என தன் இஷ்டத்துக்கு விளையாடியிருக்கிறார்.

சிறார்களிடம் Kosh-ன் ‘அணுகல்’ ஃபார்முலா போலீசாரையே கிறுகிறுக்க வைத்துள்ளது. சமூக தளம் மூலம் ஹாய் சொல்லி வலையை விரிக்கத் தொடங்குவார். ஒரு பிரபலமே தனது பிரைவேட் சாட்டில் நமக்கு ஹாய் சொல்கிறாரே என்ற ஆர்வத்தில், சிறார்களும் பேசத் தொடங்குவார்கள்.

அப்படி தான் 2017-ல், ஒரு 17 வயது சிறாரை தொடர்பு கொண்ட Kosh, மெல்ல மெல்ல செக்ஸ் சம்பந்தமான பேச்சை எடுத்துள்ளார். பிறகு ஒரு கட்டத்தில், ‘உனக்கு 400 சிங்கப்பூர் டாலர் தருகிறேன்; வீட்டிற்கு வா’ என்று கூப்பிட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர் மறுக்க, இப்படியே பேசி பேசி 2000 சிங்கப்பூர் டாலர் வரை தருகிறேன் என்று விடாமல் துரத்தியிருக்கிறார்.

இவர்களது உரையாடலை பாதிக்கப்பட்டவரின் அறை தோழர் வீடியோவில் பதிவு செய்துள்ளார். இப்படியாக, இவரது பாலியல் வேட்டை பலரிடமும் அரங்கேறியுள்ளது. மிகப்பெரும் பிரபலம் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொல்ல தயங்கிய நிலையில், ஒருவர் மட்டும் கடந்த 2020ம் ஆண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கோஷின் லீலைகளை புட்டு புட்டு வைத்தார்.

அதைப் பார்த்த பாதிக்கப்பட்ட மற்ற சிறார்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து, தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை வெளியே சொல்ல, பிறகு தான் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

அக்டோபர் 2020 இல் அவரது வீட்டில் காவல்துறை அதிகாரிகளால் கோஷ் கைது செய்யப்பட்டார், அங்கு அவரது லேப்டாப்பில் மொத்தம் 25 ஆபாச வீடியோக்கள் கண்டறியப்பட்டது. பல வழக்குகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், நேற்று (ஆக.5) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அவருக்கு 32 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts