TamilSaaga

தெக்கத்தி சிங்கமடா… சிங்கப்பூரில் கெத்து காட்டிய தமிழகத்தின் ஆண்மகன்கள்… ஆணழகனாக விருது பெற்று சாதனை

Singapore: வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, நல்ல உடற்தகுதியை ஊக்கப்படுத்த Migrant Workers Centre ரிக்ரியேஷன் கிளப்பில் மூலம் வழக்கறிஞர் குழுவின் முதல் முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை பாடிபில்டிங் போட்டி நடைபெற்றது. இதில் 38 பங்கேற்பாளர்கள் மேடையில் போஸ் கொடுத்தனர்.

அவர்களின் உடல்கள் சன்டான் லோஷனால் பளபளப்பதால், போட்டியாளர்கள் ஷார்ட்ஸ் போட்டு பைசெப்ஸ் மற்றும் வாஷ்போர்டு வயிறுகளை காட்டியபோது கூட்டத்திலிருந்து ஆரவாரம் கிளம்பியது.

இந்த போட்டியில் 30 வயதான பராமரிப்புப் பணியாளரான சிவநாதன் வல்லதன், body physique பிரிவில் வென்றார். 29 வயதான construction மேற்பார்வையாளரான ஜமன்ஜித் சிங், bodybuilding பிரிவில் சாம்பியனாகினர்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் லட்சங்களில் சம்பளம் கொடுக்கும் EPass… அப்ளே செய்ய என்னென்ன டாக்குமெண்ட்ஸ்… இதை தெரிஞ்சிக்கோங்க முத!

அவர்களுக்கு தலா $250 சிங்கப்பூர் வெள்ளி மற்றும் ஒரு கோப்பையைப் பெற்றனர். இதில் $150 மற்றும் $100 இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்ற பங்கேற்பாளர்களுக்குச் சென்றது.

MWC நிர்வாக இயக்குனர் பெர்னார்ட் மேனன், இந்த நிகழ்வின் நோக்கம் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி உழைத்து கொண்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மறந்த வாழ்க்கையை அனுபவிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். சாம்பியன்ஷிப்பை ஆண்டு விழாவாக மாற்றுவதற்கும், MWC ரிக்ரியேஷன் கிளப்பில் ஒரு முழுமையான உடற்பயிற்சி கூடத்தை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பேசிய மேனன், கோவிட் -19 நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகளால், நிறைய தொழிலாளர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் தொழிலாளர்களின் கவனத்தை திசை திருப்பவும், அவர்களுக்கு ஒரு நோக்கத்தை வழங்கவும் ஒரு வழியாகும் என்றார். இந்த போட்டியினை தொடர்ந்து பல நாடுகளில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நடத்த ஏபிபிஎஸ் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: Coretrade அடிக்க போறீங்களா… சிங்கப்பூரில் $1600 சம்பளம் தரும் இந்த கோர்ஸினை முடிக்கணுமா… மொத்தமா கேட்கும் Documents இது மட்டும் தான்!

2014ல் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்ததிலிருந்து, இந்தியாவை சேர்ந்த அன்பழகன் அன்பரசன் இரவு நேரத்தினை சமூக ஊடகங்களில் ஸ்க்ரோலிங்கில் செலவு செய்வதை மட்டுமே வழக்கமாக வைத்திருந்தாராம். ஒர்க் அவுட் என்ற வார்த்தையை கூட தள்ளி வைத்தே பார்த்த காலமாக இருந்தது.

ஆனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட Migrant Workers Centre (MWC) பாடிபில்டிங் சாம்பியன்ஷிப்பிற்கு பதிவு செய்ய அவரது நண்பர்கள் கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். அவர்கள் விருப்பத்தற்கு இணங்க ஓகே சொன்ன 29 வயதான construction ஊழியரான அவர் மூன்று மாதங்களில் 13 கிலோவைக் குறைத்துள்ளார். தற்போது அவர் 82 கிலோ எடையுடன் இருக்கிறார்.

இரவு சுமார் 10 மணிக்கு வேலையிலிருந்து திரும்பும் அன்பழகன், இப்போது சோவா சூ காங்கில் தனது தங்குமிடத்திலுள்ள ஜிம்மிற்கு ஒவ்வொரு இரவும் 30 நிமிடங்களுக்கு அது மூடப்படுவதற்கு முன்பாகச் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவருக்கு அதிக நேரம் கிடைக்கும்போது, ​​அவர் விடுதி வளாகத்தைச் சுற்றி ஜாகிங் செல்கிறார். ஃபிட்னஸ் தான் இப்போது அவரது துணையாகி இருக்கிறது.

மேலும் கூறியவர், எனது வாழ்க்கை முழுவதும் வேலை மற்றும் தூங்கும் நேரம் வரை எனது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதாக இருந்தது. போட்டியில் சேர்வதன் மூலம், எனது நேரத்தைக் கொண்டு என்னால் மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன். மேலும் நான் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் தற்போது இருக்கிறேன். எனது நண்பர்களையும் அவ்வாறே செய்ய ஊக்குவிக்க முயற்சிக்கிறேன் என்றார்.

ஞாயிற்றுக்கிழமை வெற்றியடையாமல் இருக்கலாம், ஆனால் அவர் ஏற்கனவே விலைமதிப்பற்ற ஒன்றைப் பெற்றிருந்தார். இரண்டு வயது மகளின் தந்தையான அவர், நான் உடற்தகுதியாகவும் அழகாகவும் இருப்பதாக என் மனைவி என்னிடம் கூறினார். நான் இங்கு ஆரோக்கியமாக இருப்பதை நினைத்து அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

இங்கே பங்கேற்பவர்களில் பெரும்பாலோர் கொண்டிருக்கும் உடல் என்னிடம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் இப்போதுதான் தொடங்குகிறேன், இங்கு வந்து எனது முன்னேற்றத்தைக் காண்பிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் போன்ற தொழிலாளர்கள் இதுபோன்ற நிகழ்வுகளில் போட்டியிடுவார்கள் என்று நான் நம்புகிறேன் என கண்ணில் ஒரு வித புத்துணர்ச்சியுடன் தெரிவித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் பெற எங்களது முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க”

Related posts