உலகத்தின் மிகச் சிறிய குழந்தை பிழைக்குமா, பிழைக்காதா என்ற சந்தேகமும், பதற்றமும், பயமும் எல்லோருக்கும் இருந்த நிலையில், சிங்கப்பூர் மருத்துவர்கள் ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளனர்.
Kwek Mei Ling என்ற 24 வார கர்ப்பிணிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட, அவர் சிங்கப்பூரின் National University of Hospital’s (NUH) Accident & Emergency (A&E) பிரிவுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த நாளுக்கு முன்பு வரை, அப்பெண்ணுக்கு கர்ப்பம் தொடர்பான எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. ஆனால், மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்ட பிறகு, அவரை சோதித்த மருத்துவர்கள், அவருக்கு preeclampsia எனும் சிக்கல் இருப்பதை கண்டறிந்தனர். கர்ப்பக் காலத்தில் சில சமயம் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு, அதன் காரணமாக அதீத இரத்தப் போக்கு நிகழ்வது தான் preeclampsia.
ஆனால், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த Kwek, எப்படியாவது குழந்தையை வெளியே எடுத்துவிடுங்கள் என்று மருத்துவர்களிடம் மன்றாடினார். அப்போது அவரது குழந்தை 24 வாரம், 6 நாட்கள் மட்டுமே வளர்ச்சிப் பெற்றிருந்தது. ஒரு கருவின் சராசரி கர்ப்பக் காலம் 40 வாரங்கள். இந்த குழந்தை 14 வாரங்களுக்கு முன்பேயே எடுக்கப்பட்டுவிவிட்டது.
எனினும், Kwek உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் குழந்தை வெளியே எடுத்துவிட்டனர். அப்போது அதன் எடை எவ்வளவு தெரியுமா? வெறும் 212 கிராம். பிறக்கும் குழந்தைகள் 3 கிலோ இருக்க வேண்டும். குறைந்த பட்சம் மிக மோசமான நிலையில் இருந்தால் கூட 2.2 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால், Kwek குழந்தையின் உடல் எடை 212 கிராம் இருக்க, குழந்தை நிச்சயம் உயிர் பிழைக்காது என்றே அனைவரும் கருதினர். மேலும், அந்த குழந்தை 24 செமீ நீளமும் 17.8 செமீ தலை சுற்றளவும் இருந்தது.
அறுவை சிகிச்சைக்கு முன்பு Kwek குடும்பத்துடன் பேசிய மருத்துவர் Yvonne Ng, “குழந்தை உயிர் பிழைக்க 70 சதவிகிதம் மட்டுமே வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துவிட்டு, அவர்கள் சம்மதித்த பிறகே குழந்தையை வெளியே எடுத்தனர். 212 கிராமில் எடுக்கப்பட்ட இந்த குழந்தை தான், இன்றைய தேதி வரை உலகிலேயே மிகச் சிறிய குழந்தையாகும்.
அந்த குழந்தைக்கு யூ சுவான் (Yu Xuan) என்று பெயரிடப்பட்டது. குழந்தை மிக மிக சிறியதாக இருந்ததால், 2 மிமீ விட்டம் கொண்ட, மிகச் சிறிய சுவாசக் குழாய் பயன்படுத்தப்பட்டது. அடுத்த சில வாரங்கள் யு சுவானுக்கு மிகவும் சவாலானதாக இருந்தது, அவளது அளவு மற்றும் அவளது உடையக்கூடிய தோலின் காரணமாக, செவிலியர்கள் அவளை கவனமாகக் கையாள வேண்டும் என்றும், அவளை ஒரு நிலையான நிலையில் வைத்திருக்க அதிகமாக நகர்த்தாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். இவ்வளவு சவால்களை தாண்டி அந்த குழந்தையை காப்பாற்றி இருக்கிறோம் என்று மருத்துவர் Yvonne Ng என்ஜி கூறியுள்ளார்.
முதல் ஏழு வாரங்கள், யூ சுவான் வென்டிலேட்டரில் தான் வைக்கப்பட்டார், அவர் 678 கிராம் எடைக்கு வந்த பிறகு தான் வெளியே எடுக்கப்பட்டார். பிறகு 13 மாத போராட்டங்களுக்கு பிறகு, 6.3 கிலோ எடை வந்த பிறகு, யு சுவான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன், KTP-NUCMI, NUH இல் உள்ள நியோனாட்டாலஜி துறையின் தலைவரான அசோசியேட் பேராசிரியர் ஜுபைர் அமீன், சுவானின் சுவாசிக்கும் திறன் மற்றும் இதய செயல்பாடு போதுமான அளவு வலுவாக இருப்பதை உறுதி செய்த பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
உலகின் இரண்டாவது சிறிய குழந்தை ஜெர்மனியில் 2016ம் ஆண்டு பிறந்தது. அப்போது அதன் எடை 230 கிராம் மட்டுமே. உலகின் 3வது சிறிய குழந்தை அமெரிக்காவில் 2018ல் பிறந்தது. அப்போது அதன் எடை 245 கிராம் ஆகும். ஆனால், யூ சுவானை 212 கிராமில் எடுத்து, உடல் நலத்துடன் வீடு திரும்ப வைத்து மகத்தான சாதனையை படைத்த பாக்கியசாலிகளாகிவிட்டனர் சிங்கப்பூர் மருத்துவர்கள்.