சிங்கப்பூரில் அதிகரித்து வரும் தொற்று பரவல் காரணமாக நாட்டில் உள்ள ஈரச்சந்தைகளில் மக்களின்அணுகலை நிர்வகிக்க கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று திங்கள்கிழமை (ஜூலை 19) முதல், தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் மற்றும் நகர சபைகளால் சந்தைகளில் இடைக்கால வேலிகள் அமைக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பான சோதனை சாவடிகள் அமல்படுத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு “சர்க்யூட் பிரேக்கர்” காலத்திலிருந்து இதேபோன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே 13 சந்தைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சந்தையிலும் உள்ளவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட அனுமதிக்கக்கூடிய அளவை அடைந்தவுடன் அதற்கு மேற்பட்டு அங்கு வாடிக்கையாளர்கள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என்று MOH கூறியுள்ளது.
அமோய் ஸ்ட்ரீட் உணவு மையம், சோங் பாங் சந்தை மற்றும் உணவு மையம், மற்றும் வாம்போவா ஈரச்சந்தை ஆகியவற்றிலும் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.