சிங்கப்பூர்: நவம்பர் 2015 மற்றும் ஜூலை 2016 க்கு இடையில், சரியான பணி அனுமதிச் சீட்டு இல்லாமல் சிங்கப்பூரில் freelance producer-ஆக பணிபுரிந்ததாகக் கண்டறியப்பட்ட 36 வயதான பிரிட்டனைச் சேர்ந்த நபர் தற்போது MOM-யிடம் சிக்கியுள்ளார்.
ஸ்டூவர்ட் கலம் ஆர்தர் அலிஸ்டர் (Stuart Calum Arthur Alistair) என்பவர் தாம்சன் ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்ததற்காக குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்நிறுவனம் தற்போது ரெஃபினிடிவ் ஏசியா என்று அழைக்கப்படுகிறது. அவர் long-term visit pass வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீண்ட கால விசிட் பாஸ் வைத்திருப்பவர் பணி அனுமதி அல்லது மனிதவள அமைச்சகம் (MOM) வழங்கிய ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே இங்கு பணியாற்ற முடியும்.
இந்நிலையில், Refinitiv Asia நிறுவனத்துக்கு ஸ்டூவர்ட்டை வேலைக்கு அமர்த்தியதற்காக $5,500 அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர் Yahoo நிறுவனத்திலும் freelance எழுத்தாளராகப் பணிபுரிந்ததாக இரண்டாவது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்டூவர்ட் சிங்கப்பூர் ஆர்வலர் கிர்ஸ்டன் ஹான் என்ற பெண்ணை 2014 இல் திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து நவம்பர் 2015 மற்றும் மார்ச் 2019 க்கு இடையில் அவருக்கு ஒரு Short-term Pass வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஆகஸ்ட் 2015 இல், Refinitiv நிறுவனம் ஸ்டூவர்ட்டுக்கு ஒரு வருடத்திற்கு assistant producer-ஆக பணியாற்ற வாய்ப்பு வழங்கியது. இதற்காக அவருக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதம் $4,500. அதாவது மூன்றரை லட்சம்.
அவர் இந்த வாய்ப்பை ஒப்புக்கொண்டார், ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் Refinitiv நிறுவனம் ஸ்டூவர்ட் சார்பாக employment pass-க்கு விண்ணப்பித்தது. ஆனால் அது ஒரு மாதம் கழித்து MOM-ஆல் நிராகரிக்கப்பட்டது.
நிறுவனம் பின்னர் செய்தி நிறுவனத்தில் பணிபுரிய அனுமதிக்கும் ஒப்புதல் கடிதத்திற்கு விண்ணப்பித்தது, ஆனால் இதுவும் டிசம்பர் 2015 இல் நிராகரிக்கப்பட்டது.
MOM அந்த விண்ணப்பத்தை ஆராய்ந்து பதில் சொல்வதற்குள்ளாகவே, ரெஃபினிடிவ் நிறுவனம் ஸ்டூவர்ட்டுக்கு தொலைக்காட்சி மற்றும் வீடியோ தயாரிப்பு வேலைகளை மாதம் $4,500 சம்பளத்தில் வழங்கியது.
அவரும் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். நவம்பர் 25, 2015 முதல் ஜூலை 8, 2016 வரை ஆறு மாதங்களுக்கும் மேலாக Refinitiv இல் பணியாற்றினார். இந்த ஆறு மாத காலத்தில் அவருக்கு மொத்தம் $30,375 ஊதியமாக வழங்கப்பட்டது.
அதேபோல் Yahoo! நிறுவனத்தில் அவருக்கு ஒவ்வொரு கட்டுரைக்கும் $100 வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தான், தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்டூவர்ட்டுக்கு $6,500 டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டூவர்ட்டை யாஹூவுக்கு அறிமுகப்படுத்திய 30 வயதான முஹம்மது ஃபிர்தியான்ஷா சலிமத், என்பவருக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.