TamilSaaga

சிங்கப்பூரில் உங்கள் ‘Work Permit’-ஐ அடிக்கடி தொலைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? – MOM-ஐ சாதாரணமா நினைச்சுடாதீங்க!

சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் Work Permit-ஐ தொலைத்தால் அதற்காக அந்த குறிப்பிட்ட ஊழியர் பணிபுரியும் நிறுவனம் என்னென்ன தலைவலிகளை சந்திக்க வேண்டும் என்பதை இந்த செய்தியின் மூலம் நீங்கள் அறியலாம். தெரிந்து கொண்டால் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையுடன் நீங்கள் இருக்கலாம்.

Replace a Work Permit card

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் புதிய பணி அனுமதி அட்டை தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ 1 வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு:

Work Permit Card திருடப்பட்டிருந்தால், நீங்கள் போலீஸ் புகாரையும் பதிவு செய்ய வேண்டும்.

அந்த நிறுவனத்தின் தொழிலாளி வெளிநாட்டில் இருக்கும்போது கார்டை தொலைத்துவிட்டால், உடனடியாக MOMக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு, சிங்கப்பூருக்குள் நுழையும்போது அந்த தொழிலாளி பயன்படுத்துவதற்கு ஒரு கடிதம் வழங்கப்படும்.

Who can apply?

நிறுவனம் அல்லது நியமிக்கப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் (EA) புதிய Work Permit Card-க்கு அப்ளை செய்ய வேண்டும்.

மேலும் படிக்க – சாங்கி விமான நிலையத்தில் பரபரப்பு.. உணவு சாப்பிட்ட 17 பேருக்கு உடல்நலக் கோளாறு – அவசர அவசரமாக இழுத்து மூடப்பட்ட ரெஸ்டாரண்ட்

How much it costs?

சேதமடைந்த அட்டைக்கு, கட்டணம் $60.

முதன்முறை தொலைக்கப்படும் கார்டுக்கு $100 மற்றும் அடுத்தடுத்து தொலைக்கப்படும் கார்டுக்கு $300 கட்டணம் வசூலிக்கப்படும்.

கட்டணம் திரும்பப் பெறப்படாது என்பது இங்கு ‘ஹைலைட்’

How long it takes?

பெரும்பாலான நேரங்களில் உடனடியாக புது Work Permit Card வழங்கப்பட்டுவிடும்.

Approval-க்கு பிறகு 4 வேலை நாட்களில் கார்டு வழங்கப்படும்.

குறிப்பு:

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பணியாளர் மீண்டும் மீண்டும் கார்டை தொலைத்துவிட்டால், அந்த ஊழியருடன் MOM-ன் நேர்காணலில் கலந்துகொள்ள அந்த நிறுவனம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். இரு தரப்பிலும் MOM சார்பில் விசாரணை நடத்தப்படும்.

தொலைந்து போன Card கண்டுபிடிக்கப்பட்டால், அதை உடனடியாக MOM-க்கு தபால் மூலம் திருப்பித் தர வேண்டும். மனிதவள அமைச்சகம், 18 ஹேவ்லாக் சாலை, சிங்கப்பூர் 059764 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Apply for a replacement card

சேதம் அல்லது இழப்பு ஏற்பட்ட 1 வாரத்திற்குள் replacement-க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க:

WP Online பக்கத்தை Login செய்து விண்ணப்பிக்கவும்.
GIRO அல்லது eNETS கிரெடிட் அல்லது டெபிட்டைப் பயன்படுத்தி மாற்றுக் கட்டணத்தைச் செலுத்தவும்.
சேதமடைந்த அட்டைக்கு, கட்டணம் $60.
தொலைந்த கார்டுக்கு, முதல் இழப்புக்கு $100 மற்றும் அடுத்தடுத்த இழப்புகளுக்கு $300 கட்டணம்.
எல்லா விவரங்களையும் சார்பாரித்த பிறகு உங்கள் விண்ணப்பத்தை submit செய்துவிட்டால் அதன் பிறகு, கட்டணம் திரும்பப் பெற அனுமதிக்கப்படாது.

விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, card replacement letter-ஐ Print எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மாற்று Work Permit Card-ஐ பெறுவதற்கான வழிமுறைகள் இருக்கும்.

மேலும் படிக்க – காதலன் விபத்தில் இறக்க.. அடுத்த சில நிமிடங்களில் காதலி எடுத்த விபரீத முடிவு.. அருகருகே உடல்கள் அடக்கம் – காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டிய நிலையில் உருக்குலைந்த கனவு!

Collect the replacement card

Replacement Work Permit card பெறுவதற்கு பணியாளர் பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்:

அசல் பாஸ்போர்ட்
Card replacement கடிதம்
சேதமடைந்த Card (if applicable)
பூர்த்தி செய்யப்பட்ட அறிவிப்புப் படிவம் (இழந்த அல்லது திருடப்பட்ட Card-களுக்கு)
Police அறிக்கை (திருடப்பட்ட அட்டைகளுக்கு)

குறிப்பு: வெளிநாட்டு போலீஸ் அறிக்கைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

தொலைந்து போன அல்லது திருடப்பட்ட கார்டுகளுக்கு, replacement card-ஐ பணியாளர் நேரில் சேகரிக்க வேண்டும்.

சேதமடைந்த கார்டுகளை மாற்றுவதற்கு, தொழிலாளியின் சார்பாக card-ஐ வாங்கிக் ஒருவரை நீங்கள் தேர்வு செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட அந்த நபர் கீழே குறிப்பிடப்பட்ட ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

உங்கள் நிறுவனத்திடமிருந்து அங்கீகார கடிதம்
சரிபார்ப்பிற்கான NRIC, பாஸ் அட்டை அல்லது பாஸ்போர்ட்
சேதமடைந்த Card

ஸோ, சிங்கப்பூரில் உங்கள் Work Permit-ஐ நீங்கள் எவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று யோசித்துக் கொள்ளுங்கள். தொலைந்து போனால், ஏகப்பட்ட தலைவலிகள் உறுதி என்பதை மறந்துவிட வேண்டாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts