TamilSaaga

கிராமத்து பெண் பிள்ளைகள் பள்ளி படிப்பையாவது முடிக்க வேண்டும்… தமிழகத்தில் மேல்நிலை பள்ளி நடத்தும் சிங்கப்பூர் பிஸினஸ் மேன்… 30 வருடத்தின் நிறைவு செய்த பள்ளிக்கூடம்

படிப்பு என்பது இரு தரப்பினருக்குமே சமமானதாக இருக்க வேண்டும் என்கிறது தான் முறை. ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் இதற்கு சாத்தியமே இல்லாமல் பெண் பிள்ளைகள் சரியாக படிக்க வைக்கப்படாமலே இருக்கிறார்கள். அந்த பிரச்னைக்கு ஒரு சின்ன நிவாரணமாக இருக்க எண்ணிய சிங்கப்பூரினை சேர்ந்த கே.எம். நூர்தீன் அவர் பிறந்த தமிழக கிராமத்தில் ஒரு பள்ளியினை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து பேசிய நூர்தீன், எங்கள் கிராமத்தில் எப்போதுமே பெண் பிள்ளைகளின் படிப்பு மறுக்கப்பட்டு வந்தது. அதிலும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் பாதுகாப்பு காரணம் கருதி தொலைவாக அனுப்பவே பயந்தனர். அவர்களை பள்ளிக்கு அனுப்பினால் தான் எதிர்காலம் சரியாக இருக்கும் என்று என்னுடைய தாயார் எண்ணினார். அதற்கு தன்னால் ஆன பொருளாதர உதவிகளையுமே செய்து வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக 1991ம் ஆண்டு அவர் ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை தேடிக்கொண்டு இருக்கீங்களா… EPassல் உயர்த்தப்பட்ட சம்பளம்… என்னென்ன தகுதிகள் கேட்கப்படும்

அம்மாவின் திடீர் இழப்பினை ஏற்றுக்கொள்ள முடியாத நானும், என்னுடைய தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களும் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வழி தேடினோம். இதை தொடர்ந்தே தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் இருக்கும் வடக்கரை கிராமத்தில் ‘ஹஜ்ஜா சாரா அம்­மாள் மெட்­ரிக் மேல்­நி­லைப் ­பள்ளி’ எனும் பள்­ளிக் ­கூ­டத்­தை தொடங்கினோம்.

அதே நேரத்தில் அப்பா சிங்கப்பூரிலேயே கோல்டன் சிட்டி என்ற பிசினஸினை துவங்கினார். தற்போது அதனை என்னுடைய சகோதரர் நடத்தி வருவதாக கூறினார்.

இப்பள்ளியில் பெண் பிள்ளையின் கல்வியை ஊக்குவிக்க தொடக்க நிலைக்கு பின்னர் ஆண் பிள்ளைகள் இந்த பள்ளியில் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பெண்களை படிக்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். மேலும் கஷ்டப்படும் ஆண் பிள்ளைகளை சக பெண் பிள்ளைகளுடன் அவரது பெற்றோர் அனுமதியுடன் மட்டுமே படிக்க வைக்கப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: சிங்கை வேலைக்காக சென்ற இடத்தில் வாழ வேண்டிய வயதில் இறந்த தமிழர்… உடலை தாயகம் எடுத்து வர முடியாமல் திணறிய குடும்பம்… கைக்கொடுத்த எம்.பி… மனதை உலுக்கும் சம்பவம்!

பள்ளியினை நடத்த பலமுறை பொருளாதார நெருக்கடி வந்த போதிலும் தொடர்ந்து தன்னுடைய அன்னையின் ஆசைக்காகவும், பெண் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் நடத்து வருகிறார். குறைந்த வரு­மா­னம் கொண்ட குடும்­பங்­க­ளின் பிள்­ளை­க­ளுக்கு ஊக்­கத்­தொ­கையுடன் பள்­ளிக் கட்­ட­ணத்­தில் சலு­கை­யும் அளிக்­கப்­ப­ட்டு வருகிறது.

இப்பள்ளியினை மூடலாம் என்று ஒருமுறை நினைத்தபோது கூட கிராம மக்கள் இந்த பள்ளியால் தான் பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறோம் இல்லையென்றால் படிப்பினை நிறுத்தி விடுவோம் எனத் தெரிவித்ததனை கேட்ட நூர்தீன் 10 பிள்ளைகள் இருந்தால் கூட தொடர்ந்து பள்ளியினை நடத்தி வருகிறார். சமீபத்தில் தான் இந்த பள்ளி 30 வருட விழாவினை சிறப்பாக கொண்டாடி முடித்தது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts