TamilSaaga

விமானத்தில் சிங்கப்பூர் பயணம்.. கொதிக்க கொதிக்க மேலே ஊற்றப்பட்ட டீ.. வெந்துபோன பிஞ்சு குழந்தையின் கால்!

இத்தாலியின் மிலன் நகரில் இருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த விமானத்தில் 4 வயது சிறுமி மீது சூடான டீ கொட்டியதால் அவர் பலத்த காயம் அடைந்தார். இந்நிலையில் சிறுமியின் தாயார், லிம், மதர்ஷிப்புடன் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை விவரித்தார், மேலும் இந்த சம்பவம் தனது மகளின் தோல் மேல் தீக்காயத்தை ஏற்படுத்தியதை பகிர்ந்து கொண்டார்.

லிம் தனது கணவர் மற்றும் மகளுடன் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் சிங்கப்பூர் திரும்பிக்கொண்டிருந்ததாக மதர்ஷிப்பிடம் கூறினார். நடுவானில் அவர்களின் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, லிம் ஒரு கோப்பை சூடான தேநீரைக் கேட்டுள்ளார்.

அது வந்ததும் தேனீரை தனது இருக்கைக்கு முன் இருந்த காப் ஹோல்டரில் வைத்துள்ளார், ஆனால் அந்த குறுகிய இடத்தில் “முன் இருக்கை பயணி தனது நாற்காலியை கீழே இறக்கும்போது” தற்செயலாக சூடான தேநீர் கோப்பை தவறியுள்ளது.

இந்நிலையில் சூடான அந்த தேநீர் அவர் அருகில் உறங்கிக் கொண்டிருந்த அவர் மகள் மீது தெறித்தது. அது அவரது மகளின் கால்கள் முழுவதும் பரவி “கடுமையான தோல் தீக்காயங்களுக்கு” வழிவகுத்தது என்றார் அவர்.

இதனால் ஏற்பட்ட வலியின் காரணமாக, தனது மகள் ஒரு மணி நேரம் இடைவிடாமல் அழுததாக அவர் மேலும் கூறினார். விமான பணிப்பெண்கள் உடனே அங்கு வந்து bandage மற்றும் பிற மருத்துவ சாதனங்களை அவர்களுக்கு அளித்துள்ளனர்.

கத்தார் ஏர்வேஸின் எகானமி கிளாஸ், விமானம் ஏ350ல் உள்ள கப்ஹோல்டர்கள் “மிகவும் ஆபத்தான” நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் லிம் வலியுறுத்தினார். மேலும் அவர் மற்ற விமானங்களின் வடிவமைப்புகளில் சில ஆராய்ச்சிகளை செய்ய, அவை எதுவும் இந்த அளவுக்கு ஆபத்தான வகையில் வடிவமைக்கப்படவில்லை என்றார்.

“எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க சூடான பானங்களைக் கையாளும் போது எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு பயணிகளுக்கு அறிவுறுத்துமாறு எங்கள் கேபின் குழுவினருக்கு நினைவூட்டுவோம்” என்றும் கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts