TamilSaaga

பரபரப்பான சிங்கப்பூர் Eunos சாலை.. Zebra Crossingல் சாலையை கடக்க முயன்ற முதியவர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி ஏறி உடல் நசுங்கி பலி – தவறு யார் மீது?

சிங்கப்பூர் Euons பகுதியில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி Zebra Crossingகில் தனது மிதிவண்டியில் சாலையை கடக்க முயன்ற 64 வயது முதியவர், எதிர்பாராத விதமாக லாரி ஒன்றால் நசுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் வெளியான சில புகைப்படங்களில், சம்பவ இடத்தில் துணை மருத்துவர்களால் ஒருவருக்கு முதலுதவி அளிக்கப்படுவதை காணமுடிந்தது. அருகில் நசுங்கிய நிலையில் ஒரு மிதிவண்டி கிடப்பதையும் காணமுடிந்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் Jalan Eunos பகுதியில் இருந்து வந்த விபத்து குறித்த அழைப்பை தொடர்ந்து அந்த பகுதிக்கு விரைந்தது. மயக்கமடைந்த நிலையில் இருந்த அந்த நபர் உடனடியாக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிங்கப்பூர் Sengkang பகுதி.. இரண்டு நாட்களாக தேடப்படும் 12 வயது சிறுமி – மக்களின் உதவியை நாடும் சிங்கை போலீசார்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார், விபத்து நடந்த பிறகு அந்த பகுதியில் ரத்தம் சிதறி கிடந்ததாகவும். ஹெல்மெட் இல்லாமல் தரையில் ஒரு நபர் விழுந்து கிடந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.

முப்பது நிமிடத்தில் 40 மின்னல்கள்.. காண்போரை ஒரு நிமிடம் அசரவைக்கும் புகைப்படம் – எல்லாம் இந்த சிங்கப்பூர் புகைப்பட கலைஞரின் கைவண்ணம்

கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 27 வயதுடைய லாரி டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றன, இந்த வழக்கில் யார் மீது குற்றம் உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை.


“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts