TamilSaaga

முப்பது நிமிடத்தில் 40 மின்னல்கள்.. காண்போரை ஒரு நிமிடம் அசரவைக்கும் புகைப்படம் – எல்லாம் இந்த சிங்கப்பூர் புகைப்பட கலைஞரின் கைவண்ணம்

நேற்று ஏப்ரல் 17ம் தேதி சிங்கப்பூர் வானில் பல முறை பலத்த மின்னல்கள் வெட்டியதை நிச்சயம் நீங்கள் கண்டிருப்பீர்கள். சிங்கப்பூர் வானை அலங்கரித்த அந்த மின்னல்கள் அணிவகுப்பை ஒரு சிங்கை புகைப்பட கலைஞர் தத்ரூபமாக படம்பிடித்துள்ளார்.

அந்த கலைஞர் எடுத்த புகைப்படம் நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது, இடியுடன் கூடிய மழையின் கலவையான அந்த புகைப்படங்கள் பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

CloudSpotting & Sky Spotting Singapore என்ற Facebook குழுவில் சைமன் லிம் பதிவேற்றிய இந்தப் புகைப்படம், 100க்கும் மேற்பட்ட கமெண்ட்களையும் 1,500க்கும் மேற்பட்ட பகிர்வுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. புகைப்படக் கலைஞரான சைமன் லிம், மதர்ஷிப்பிடம் பேசுகையில், இந்த புகைப்படம் உண்மையில் 14 புகைப்படங்களின் தொகுப்பால் ஆனது என்றார்.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனம்.. மலேசியாவில் மின்சாரம் திருடியதாக குற்றச்சாட்டு – அடுத்தடுத்து வெடிக்கும் சர்ச்சை!

மரைன் பரேட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகமான நெப்டியூன் கோர்ட்டில் உள்ள தனது பால்கனியில் இருந்து ஒவ்வொரு புகைப்படமும் எடுக்கப்பட்டதாக 53 வயதான அவர் கூறினார். அந்த புகைப்படம் வெளியான அவரது பேஸ்புக் பதிவில், இந்த காட்சிகள் நேற்று இரவு 8:40 முதல் 9:10 வரை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

30 நிமிடங்களில் 40க்கும் மேற்பட்ட மின்னல்கள் வெட்டியதாகவும் அவர் கூறினார், அவர் “சரியான நேரத்தில் சரியான இடத்தில்” இருந்ததற்காகவும், ஷாட் வேலை செய்ய சரியான சூழ்நிலைகள் இருந்ததற்காகவும் இயற்கைக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று லிம் பணிவுடன் கூறினார்.

எனக்கு இந்த நிறுவனத்தில் ஒரு வேலை கிடைக்காதா?.. தொழிலாளர்களை ஏங்க வைக்கும் சிங்கப்பூர் நிறுவனம் – படையெடுக்கும் Resumes

எதிர்வரும் காலங்களில் இயற்கையின் இந்த அழகை வெளிப்படுத்த இதுபோன்ற நல்ல பல புகைப்படங்களை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts