TamilSaaga

“சிங்கப்பூர், மலேஷியா நில வழி எல்லை திறப்பு” : பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் – வர்த்தக அமைச்சகம்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே தனிமைப்படுத்தப்படாத பயணத்திற்காக இரு நாடுகளின் நில எல்லைகளை மீண்டும் திறப்பது விரைவில் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு குறித்து இரு நாடுகளுக்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் இடையே பயணம் செய்பவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பயண பாதை (VTL) திட்டத்தின் விவரங்களை விரைவில் இறுதி செய்ய முடியும் என்று நம்புவதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 18) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் மலேசியா இடையே VTL சேவை

“இரு நாடுகளைச் சேர்ந்த பல தொழிலாளர்களும் பல மாதங்களாக தங்கள் குடும்பங்களைப் பார்க்க முடியவில்லை. மேலும் அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு அனுமதிக்க, நில எல்லைகளை மீண்டும் திறக்கும்போது அவர்கள் எங்கள் முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பார்கள்” என்று MTI செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சிங்கப்பூருக்கும் ஜொகருக்கும் இடையிலான நில எல்லைகள் நவம்பர் 29ம் தேதி திறக்கப்படும் என்று மலேசியாவில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சகம் இவ்வாறு கூறியது. இது சாங்கி விமான நிலையம் மற்றும் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே விமானப் பயணத்திற்கான இருதரப்பு VTL இன் தொடக்கத்துடன் ஒத்துப்போகும் என்றும் அமைச்சகம் தெரிவித்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

VTL திட்டத்தின் கீழ், தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் நீண்ட தனிமைப்படுத்தலுக்குச் உள்ளாகாமல் எந்த நாட்டிற்கும் செல்ல முடியும். அதற்குப் பதிலாக, அவர்கள் புறப்படுவதற்கு முன்பும், சேரும் நாட்டிற்கு வந்தவுடனும் எதிர்மறைச் சோதனையைச் செய்ய வேண்டும். தொற்றுநோய்க்கு முன்பு, உட்லண்ட்ஸ் காஸ்வே மற்றும் துவாஸ் இரண்டாவது இணைப்பு ஆகியவை தினமும் சுமார் 415,000 பயணிகளைக் கண்டன. மேலும் பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 1,00,000 மலேசியர்கள், சிங்கப்பூரில் தங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts