சிங்கப்பூரில் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 30) நண்பகல் நிலவரப்படி 2,478 புதிய வழக்குகள் மற்றும் வைரஸால் ஏற்பட்ட சிக்கல்களால் மேலும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் ஒருவர் 79 வயதான சிங்கப்பூர் நிரந்தரவாசி என்றும் மற்றொருவர் 87 வயதான சிங்கப்பூரர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்த இரண்டு மூதாட்டிகளுமே தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடவில்லை என்று MOH தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று பதிவான 2,474 புதிய வழக்குகளில், சமூகத்தில் 2,022 வழக்குகள் மற்றும் 452 தங்குமிட குடியிருப்பாளர்களை உள்ளடக்கிய உள்ளூர் தொற்று நோய்கள் அடங்கும். இந்த வழக்குகளில் 60 வயதுக்கு மேற்பட்ட 535 முதியவர்கள் இருப்பதாக MOH தனது தினசரி பதிப்பில் நேற்று இரவு 11 மணிக்கு ஊடகங்களுக்கு வெளியிட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த நான்கு பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக தீவில் 2000க்கும் அதிகமான அளவில் தொற்று பதிவாகியுள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூர் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மொத்தம் 96,521 பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மருத்துவமனையில் 1,360 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் நன்றாக மற்றும் கண்காணிப்பில் உள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை பட்டியலில் சேர்க்கப்பட்ட ஏழு உட்பட 15 தொற்று குழுமங்கள் மீது நெருக்கமான கவனத்தை MOH செலுத்திவருகின்றது. சமீபத்திய பெரிய கிளஸ்டர்களில் ஆறு புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்குமிடங்கள் மற்றும் மார்சிலிங்கில் ஒரு பராமரிப்பு இல்லம் இணைந்துள்ளது.
ஜூரோங் பெஞ்சுரு தங்குமிடம் 1, ஜூரோங் பெஞ்சுரு தங்குமிடம் 2, ஏஎஸ்பிஆர்ஐ-வெஸ்ட்லைட் பாப்பன் விடுதி, 9 தெஃபு தெற்கு தெரு 1 விடுதி, கோக்ரேன் லாட்ஜ் 2 தங்குமிடம் மற்றும் பிபிடி லாட்ஜ் 1 பி தங்கும் விடுதி உள்ளிட்ட 6 Dormitoryயில் தற்போது மொத்தம் 475 வழக்குகள் உள்ளன.