TamilSaaga

யாரோ தாலி கட்ட யாரோ குடும்பம் நடத்துறாங்களாம்… உக்ரைன் போர் காரணமாக சிங்கப்பூரில் 10 சதவீதம் உயரும் மின் கட்டணம்!

ஏப்ரல் முதல் ஜூன் 2022 வரையிலான அடுத்த மூன்று மாதங்களுக்கு சிங்கப்பூரில் வீட்டு பயன்பாடுகளுக்கான மின்சாரக் கட்டணம் உயருகிறது.

ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போர் காரணமாக மின்சாரக் கட்டணம் சுமார் 10 சதவீதம் உயரும் என மார்ச் 31ஆம் தேதி கிரிட் ஆபரேட்டர் எஸ்பி குரூப் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தவிர்த்து, ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் மின்சாரக் கட்டணம் கிலோவாட்-மணிக்கு 27.94 சென்ட்களாக இருக்கும்.

தற்போதைய விலை ஒரு kWh க்கு 25.44 சென்ட்.

சிங்கப்பூர் புறப்படும் “Indigo” விமானத்தின் நேரம் மாற்றம்.. நள்ளிரவு விமானம் முற்றிலும் ரத்து – இனி மாலை 6.40 மணிக்கு ஈஸியா கிளம்பலாம்!

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த உயர்வு சராசரியாக ஒரு kWhக்கு 2.49 சென்ட்கள் அல்லது 9.9 சதவீதம் என்று SP குழுமம் தெரிவித்துள்ளது.

இது கடந்த மூன்று மாதங்களில் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகும்.

நான்கு அறைகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பொதுவாக ஒரு மாதத்திற்கு சுமார் 349 kWh மின்சாரம் தேவைப்படுகிறது.

நான்கு அறைகள் கொண்ட வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் சராசரி மாத மின் கட்டணம் GST தவிர்த்து S$8.73 ஆக உயரும் என எதிர்பார்க்கலாம் என்று SP குழுமம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் செல்லும் “Air India Express” விமானம்… இனி ‘Night Travel’ கிடையாது – திருச்சியில் இருந்து ‘Morning Flight’-ஆக நேர மாற்றம்!

“உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக அதிகரித்துள்ள உலகளாவிய எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதால் ஏற்படும் அதிக ஆற்றல் செலவினமே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும்” என்று SP குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

அதே நாளில், சிட்டி எனர்ஜி ஒரு தனி அறிக்கையில், அடுத்த காலாண்டில் வீடுகளுக்கான எரிவாயு கட்டணம் ஒரு kWhக்கு 20.21 சென்ட்களில் இருந்து GST தவிர்த்து kWhக்கு 21.66 காசுகளாக உயரும் என்று கூறியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts