TamilSaaga

சிங்கப்பூரில் களைகட்டிய Hari Raya Puasa கொண்டாட்டங்கள் – கண்கவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புலம்பெயர் தொழிலாளர்கள்

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் பல்வேறு கார்ப்பரேட், மத மற்றும் அரசு சாரா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் சுமார் 3,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டு நேற்று செவ்வாயன்று (மே 3) ஹரி ராய புசாவைக் கொண்டாடினர்.

“10 க்கும் மேற்பட்ட தங்குமிடங்களில் இருந்து சுமார் 3,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காலையில் ஈத் பெருநாள் பிரார்த்தனைகளில் பங்கேற்றனர். மேலும் மதியம் கார்னிவல் விளையாட்டுகள் மற்றும் சில நேரடி நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்றனர்” என்று MOM நேற்று செவ்வாயன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரின் துவாஸ் சவுத் ரிக்ரியேஷன் சென்டரில் நடந்த இந்த நிகழ்வானது, Dormitoryகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகளை நிர்வகிக்கும் MOM’s Assurance, Care and Engagement (ACE) குழு மற்றும் இலாப நோக்கற்ற குழுவான The Alliance of Guest Workers Outreach ஆகியவற்றால் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வின்போது வெளியான சில தகவல்களின்படி முடிவடைந்த இந்த “நோன்பு மாதத்தில் 70,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,00,000க்கும் மேற்பட்ட பேரீச்சம்பழங்கள் மற்றும் 3,000 உணவுகள் விநியோகிக்கப்பட்டன” என்று MOM தெரிவிதத்து.

“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய நண்பர்களுடன் ஓய்வு நாட்களை கழிக்க வசதியாக, சென்டோசா, கார்டன்ஸ் பை தி பே மற்றும் இந்திய பாரம்பரிய மையம் போன்ற பல்வேறு இடங்களுக்கு சமூக பயணங்களை நாங்கள் எளிதாக்கினோம்” என்றும் MOM தெரிவித்தது.

சிங்கப்பூர் புலம்பெயர் தொழிலாளர்கள் கவனத்திற்கு.. சிங்கையில் புதிய வேலை தேடும்போது கவனம் தேவை – அதிகரிக்கும் வேலைவாய்ப்பு மோசடிகள்

கூடுதலாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பண்டிகைக் காலங்களில் தங்கள் தங்குமிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களுக்குள் கபடி போட்டிகள் மற்றும் சமையல் போட்டிகள் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளை அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதவள அமைச்சர், டாக்டர் டான் சீ லெங், கொண்டாட்டங்களை சாத்தியமாக்குவதற்கு MOM உடன் நெருக்கமாக பணியாற்றிய பல்வேறு கூட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் சிங்கப்பூரின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பராமரிக்க முழு சமூகமும் முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறினார்.

சிங்கப்பூர் தமிழர்களின் “சூப்பர்” முயற்சி! – தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் தான் கைக்கொடுக்கணும் – மேடையிலேயே அசந்து பேசிய பிரபலம்

மேலும் புலம்பெயர் தொழிலாளர்களை நேரில் சந்தித்த அவர் அவர்களோடு Selfie எடுத்து மகிழ்ந்தார், சுமார் இரண்டு ஆண்டுகளில் கழித்து இந்த கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts