TamilSaaga

“சிங்கப்பூரில் பாதசாரி மீது பலமாக மோதிய இ-ஸ்கூட்டர் ஓட்டுநர்” : ஒரு வார சிறை தண்டனை விதிப்பு

சிங்கப்பூரில் தனது வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மசூதிக்குச் செல்ல விரைந்த ஜானி பாஷா முகமது நிஜாமுதீன் என்பவர் போக்குவரத்து நெரிசலில் எளிதாக செல்ல தனது மின்சார ஸ்கூட்டரை சாலையில் ஓட்ட முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் விரைவாக சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு பாதசாரி மீது மோதியதில், பாதிக்கப்பட்டவருக்கு அவரது மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் : பெற்றோர்க்கு இன்ப அதிர்ச்சி அளித்த “சிங்கப்பூர்” பிள்ளைகள்

கடந்த புதன்கிழமை (டிசம்பர் 8) அன்று 41 வயதான நிரந்தர குடியிருப்பாளர் ஜானி பாஷா முகமது நிஜாமுதீனுக்கு ஒரு வார சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் தனது தண்டனையை அனுபவிக்கத் தொடங்குவார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் தனது மனைவிக்கு சில மருத்துவ நேர்காணல்களில் உதவ வேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

65 வயதான பெண்மணி இங் ஜியோக் யா-னை வாகனம் ஓட்டுவதன் மூலம் காயப்படுத்திய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மற்றொரு குற்றச்சாட்டும் அவர் மீது சுத்தமப்பட்டு தண்டனையின்போது கருத்திக்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019 ஜூலை மாதம் 19ம் தேதி அன்று மதியம் 2 மணியளவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ஜானி பாட்ஷா தனது வீட்டில் இருந்து சைனாடவுன் பகுதியில் உள்ள மஸ்ஜித் சூலியாவுக்கு சென்று கொண்டிருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அவர் முதலில் ஒரு நடைபாதையில் சவாரி செய்துகொண்டிருந்தார். அது 2019ம் ஆண்டு அந்த நேரத்தில் அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் பின்னர் பின்னர் நடைபாதையில் ஏராளமான பாதசாரிகள் இருந்ததாலும், தனது தொழுகைக்கு நேரமானதாலும் தெற்குப் பாலம் சாலையின் இடதுபுறப் பாதையில் வடக்குப் பாலம் சாலையை நோக்கிச் செல்ல முடிவு செய்தார். அப்போது தன் இந்த எதிர்பாராத விபத்து நடந்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts