சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை மீறியதற்காக இந்த வாரம் பத்து உணவு மற்றும் பானம் (எஃப் & பி) விற்பனை நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டது. இதில் தடுப்பூசி போடப்பட்ட வாடிக்கையாளர்களை மட்டும் அரசு அனுமதிக்க அனுமதி அளித்த நிலையில் அதை மீறியதாக மூன்று நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரத்தில் பல்வேறு அரசு நிறுவனங்கள் ஏறக்குறைய 700 வளாகங்கள் மற்றும் 2,500க்கும் மேற்பட்ட தனிநபர்களை சோதனை செய்த பிறகு, இது கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் நிலைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் (MSE) கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 27) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி நடவடிக்கைகளை மீறிய மூன்று விற்பனை நிலையங்கள் பிரின்செப் தெருவில் நோ நேம் பார், ஜலான் பெசாரில் உள்ள பிக்ஸ் ஆர்கன் சூப்பின் ஆதென்டிக் முன் சீ கீ கிங் மற்றும் கிளைவ் ஸ்ட்ரீட்டில் பிக் பாஸ் பிஸ்ட்ரோ ஆகிய நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் எம்எஸ்இ, நோ நேம் பார் வளாகத்திற்குள், அமலாக்க அதிகாரிகள் நுழைவதை தாமதப்படுத்தியது என்றும், அதன் வளாகத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் ஐந்து தடுப்பூசி போடப்பட்ட நபர்களின் அனுமதிக்கப்பட்ட குழு அளவைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய தவறியது என்றும் கூறப்படுகிறது. அந்த உணவு நிருவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு SafeEntryஐ செயல்படுத்தவில்லை.
இந்த விதி மீறல்களுக்காக ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 4 வரை 10 நாட்களுக்கு அந்த கடையை மூட நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.