TamilSaaga

கடல் வழியாக சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த 8 பேர் – கைது செய்த போலீஸ்

சிங்கப்பூருக்குள் கடல் வழியாக சட்டவிரோதமாக நுழைய நீந்தி கரைக்குச் வந்த 8 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 27) அதிகாலை 2.30 மணியளவில், சிங்கப்பூர் கடலோர காவல்படையின் (பிசிஜி) கண்காணிப்பு அமைப்பு நடத்திய சோதனையில், 8 பேர் கொண்ட குழு பைபர் கிளாஸ் படகில் இருந்து துவாஸ் அருகே உள்ள ஒரு படகில் இருந்து தண்ணீரில் குதித்ததை கண்டறிந்தனர்.

மேலும் சிங்கப்பூர் கடற்கரையை நோக்கி அந்த நபர்கள் நீந்தி வந்தாக காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. அவர்கள் அவ்வாறு நீந்தி வருவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, PCGயைச் சேர்ந்த அதிகாரிகள், ஜூரோங் காவல் பிரிவு, கூர்கா கான்டிஜென்ட் மற்றும் சிறப்பு நடவடிக்கைக் கட்டளை ஆகியவற்றின் அதிகாரிகளின் உதவியுடன் உடனடியாக அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். என்றும் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் 21 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவர்கள் மீது இன்று சனிக்கிழமை இன்று வழக்கு பதிவு செய்யப்படும். அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் மூன்று பிரம்படிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அவர்கள் எந்த நாட்டில் இருந்து சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்டனர் என்பதும் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related posts