TamilSaaga

சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட தமிழர்?..GIC சிங்கப்பூர் நிறுவனத்தின் மீது புகார் – போலீசார் தீவிர விசாரணை

அண்டை நாடான இந்தியாவில் உள்ளது தான் சண்டிகர், அங்கு வசித்து வரும் ஆனந்த் சிங் என்ற நபர், சிங்கப்பூரின் GIC கார்ப்பரேஷன் நிறுவனத்தின், இயக்குநர் லிண்டா தனது கனரா வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிக் கணக்குகளை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் ஆனந்தை ஏமாற்றியதாக சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது?

இந்த வழக்கு குறித்து ஆனந்த் தெரிவித்தது, “அந்தப் பெண் என்னுடன் முதலில் WhatsApp மூலம் தொடர்பு கொண்டு, முதலீட்டு நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறினார். பிறகு என்னையும் அவர் முதலீடு செய்ய ஊக்குவித்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன்”.

அடுத்த ஜென்மத்திலும் உங்கள் மகனாக பிறக்க வேண்டும்.. தாயை விரட்டிவிட்ட மகளுக்கு மத்தியில் ஒரு “தங்க மகன்” – சிங்கப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

“ஒரு கட்டத்தில் அவர் தனது இந்திய வாடிக்கையாளர்களில் சிலரின் வங்கி விவரங்களை எனக்கு அனுப்புவார், மேலும் அவர்களை எனது கணக்கிற்கு எனது அனுமதி இல்லாமல் பணத்தையும் மாற்றும்படி கூறுவர். இது போன்ற நிகழ்வுகள் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் 2021க்கு இடையில் நடந்தது” என்றும் அவர் கூறினார்.

இறுதியில் ஒரு முதலீட்டு மோசடி தொடர்பாக அந்த பெண், தான் ₹53,000 ஏமாற்றப்பட்டதாகக் கூறியதை அடுத்து, விசாகப்பட்டினத்தில் பதிவுசெய்யப்பட்ட அந்த FIR வழக்கில் ஆனந்தின் வங்கிக் கணக்கும் இணைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ந்துள்ளார். எந்த வகையிலும் அந்த பெண்ணின் முதலீட்டில் தான் தலையிடவில்லை என்றும், தன்னை அவர் ஏமாற்றியுள்ளார் என்றும் ஆனந்த் கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் மிகப்பெரிய தமிழ் இலக்கியத் தொகுப்பு.. பொதுமக்களுக்காக திறப்பு – திருக்குறளை மேற்கோள்காட்டி அசர வைத்த அமைச்சர்!

இதேபோன்ற ஒரு மோசடியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், 12 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையின்றி மற்றவர்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி, அதை திருப்பி பெற்றுக்கொண்டு பிறகு தன்னை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளிக்கும் கும்பல் இதுவா? என்று இந்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 417 மற்றும் 419 ஆகியவற்றின் கீழ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts