TamilSaaga

சிங்கப்பூரில் 24 தனியார் நிறுவனங்கள் கோவிட் தடுப்பூசியை நிர்வகிக்க தேர்வு – விலை என்ன?

அரசாங்கத்தின் சினோவாக் கோவிட் 19 தடுப்பூசியை நிர்வகிக்க 24 தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று (ஜீன் 16) தெரிவித்துள்ளது.

ஒரு தவணை தடுப்பூசியின் விலை சுமார் 10 டாலர் முதல் 25 டாலர் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத கோவிட் 19 தடுப்பூசிகளுக்கான சிறப்பு அணுகல் பாதை (SAR – Special Access Route) மூலம் வழங்குநர்கள் சுகாதார அமைச்சுவின் பங்குகளை சிங்கப்பூரின் குடியிருப்பாளர்கள் மற்றும் நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்களுக்கு சினோவாக்சினின் இரண்டு தவணை ஊசிகளையும் வழங்க முடியும்.

தடுப்பூசியை நிர்வகிப்பதற்கான தனியார் வழங்குனர்களின் விண்ணப்பங்கள், பாதுகாப்பாகவும் முறையாகவும் திறமையாகவும் செய்யக்கூடிய திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

சேவையானது பாதுகாப்பாகவும் மலிவு விலையிலும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் வழங்குநரால் முன்மொழியப்பட்ட தடுப்பூசி கட்டணம், நிர்வாக அனுபவம், கடந்தகால உரிமம் பரிசோதனை மற்றும் வரலாறு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டதாகவும், இந்த தடுப்பூசிகள் எந்தவித செலவும் இல்லாமல் வழங்குநருக்கு தரப்படுவதால் தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வழங்குனர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நிர்வாக கட்டணத்தை தவிற கூடுதலாக எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது எனவும் பட்டியலில் உள்ள கட்டணங்களில் 7% ஜி.எஸ்.டி யும் அடங்கும் என கூறியுள்ளது.

சினோவாக் தடுப்பூசி பெற விரும்புவர்கள் ஜீன் 18 முதல் வழங்குனர்களை தொடர்புகொள்ளலாம்.

Related posts