TamilSaaga

ஏர்போர்ட்டின் உள்ளே சினிமா தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஹோட்டல்ஸ் – “பிரம்மாண்ட பாகுபலி”யாக உருமாறி வரும் சென்னை விமான நிலையம்

அண்டை நாடான இந்தியாவில் உள்ள பல விமான நிலையங்கள் தற்போது Upgrade செய்யப்பட்டு வருகின்றது என்பதை நாம் அறிவோம். குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் திருச்சி ஆகிய விமான நிலையங்களில் புதிய முனையங்கள் கட்டும் பணி விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதுப்பொலிவு பெற்று வரும் சென்னை பன்னாட்டு விமான நிலையம் குறித்து சில சுவாரசிய தகவல்களை இப்பொது காணலாம்.

இனி சென்னை விமான நிலையத்தின் வழியாக பயணிக்கும் பயணிகள் முனையத்திற்குள்ளேயே சினிமா பார்த்து மகிழலாம், அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். ஆம் சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை விமானநிலையத்தில் ஒருங்கிணைந்த முனையும் கட்டும் பணி இறுதி தற்போது கட்டத்தை எட்டி உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு தொடங்கிய இதற்கான பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய முனையத்தில் பயணிகளை கவரும் வகையில் தமிழகத்தின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை பறைசாற்றும் ஓவியங்கள் இடம்பெறவிருக்கின்றன.

Exclusive : சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்ட உடன்பிறந்த சகோதரன்.. இறுதிச்சடங்கிற்கு கூட போக முடியாமல் சிங்கப்பூரில் தவிக்கும் அண்ணன் – இவ்வளவு தானா இந்த வெளிநாட்டு வாழ்க்கை!

மேலும் இன்னும் இரண்டு மாதங்களில் விமான சேவை பாதுகாப்பு பிரிவு உள்ளிட்டவை அந்த ஒருங்கிணைந்த புதிய பன்னாட்டு முனையத்திற்குள் மாற்றப்பட உள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகளை கவரும் விதமாக விமான நிலையத்தின் முன் பகுதியில் 250 கோடி ரூபாய் மதிப்பில் 6 தளங்களுடன் கூடிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் ஐந்து திரையரங்குகள், ஹோட்டல்கள், கடைகள் என்று பலவித அம்சங்கள் அமைக்கப்படும், மேலும் 2100 கார்களை நிறுத்த பார்க்கிங் பகுதியும் அமைக்கப்பட்டு வருகின்றது. முனையம் காட்டும் பணிகள் 85 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன என்பதும் நினைவுகூரத்தக்கது.

சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குமரவேல் ராஜா.. வெளிநாட்டுக்கு அனுப்பி மகனை பலி கொடுத்த அவரது குடும்பத்தின் தற்போதைய நிலை என்ன?

பயணிகள் பயன்படுத்தும் முறையில் பல்வேறு தகவல்கள் அடங்கிய செயலி ஒன்றையும் அறிமுகம் செய்ய ஆவணம் செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய விமான நிலைய இயக்குனர் சரத்குமார் கூறினார். புதிதாக கட்டப்படும் பார்க்கிங்கில், கார்களை பார்க்கிங் செய்வதற்கான முன்பதிவுகளை இணையம் மூலம் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும் விமான நிலைய வளாகத்தில் ஒரு இயற்கை பூங்காவும் அமைக்கப்பட்டுவருகின்றது என்று அதிகாரிகள் கூறுகின்றார். மொத்தத்தில் அதி விரைவில் சென்னை விமான நிலையம் ஒரு சொர்கபுரியாகவே மாறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts