TamilSaaga

சிங்கப்பூரின் “அடையாளம்”.. அனைவரையும் கண்ணீர் விட வைத்து.. 60 வயதில் மரணித்த எகிப்து கழுகு “Rod” – 31 வருடங்களாக சிங்கப்பூரின் வான் எல்லைகளை ஆண்ட “அரசன்”!

சிங்கப்பூரின் அடையாளமாய் விளங்கிய, Jurong Bird Park-ன் மிக மிக பழமையான எகிப்திய கழுகான ‘Rod’ வயது மூப்பின் காரணமாக நேற்று (ஆக.25) நம்மை விட்டு பிரிந்தது.

இதுகுறித்து Mandai Wildlife Reserve முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எங்களின் எகிப்திய கழுகு Rod-ன் மறைவை நாங்கள் கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். அவருக்கு மிகவும் வயதாகிவிட்டது. ஜூரோங் பறவை பூங்காவின் (JBP) முன்னோடி தலைமுறையாக இருந்தவர் Rod.

1971 இல் நமது பூங்கா திறக்கப்பட்டபோதே, அது அடல்ட் பறவையாக இருந்தது. இதன் மூலம், அவர் நமது சிங்கப்பூரின் மிக பழமையான பறவையாகவும், உலகின் பழமையான பறவையாகவும் பெயர் பெறுகிறது. அதற்கு 60 வயது இருக்கலாம். இது எகிப்திய கழுகுகளின் இயற்கையான ஆயுட்காலத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.

வயதான பறவையாக இருந்ததால், ராட் வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டிருந்தது. இதனால் அது 2018 ஆம் ஆண்டு முதல் மூத்த விலங்கு பராமரிப்பு திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் சென்ற இளம்பெண் மர்ம மரணம்… அடுத்த சிலமணி நேரத்தில் சிங்கப்பூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! – ‘எல்லாம் முடிந்தது’ என ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை!

Rod பூங்காவிற்கு வந்த காலத்தில் இருந்தே அதனை பராமரித்து வந்தவர் Clarence Saw. Rod இழப்பு குறித்து அவர் கூறுகையில், “ராட் ஒரு சிறப்பு பறவை. என்னுடன் மிக நீண்ட காலம் பணிபுரிந்த பறவை அதுதான்.

28 வயது இளைஞனாக எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் எனது பறவைகளைக் கையாளும் திறனை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். அதன் அமைதியான மற்றும் சாந்தமான குணம் அதனுடன் வேலை செய்வதை எளிதாக்கியது. அது ஒருபோதும் யாரையும் தாக்கவோ அல்லது தீங்கு செய்யவோ முயற்சித்ததில்லை.

1991 முதல் 2011 வரை, ராட் ‘கிங்ஸ் ஆஃப் தி ஸ்கை’ஸின் ஒரு பகுதியாக இருந்தார். அதன் இழப்பை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்று கண்ணீர் ததும்ப பேசினார்.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts