TamilSaaga

குடும்பத்தை பிரிந்து 10 வருஷமாச்சு.. தனி ஆளாக சிங்கப்பூரில் வேலைப் பார்க்கும் ஒரு தாய் – கஷ்டம் உணர்ந்து படித்துக் கொண்டே வேலைக்கு செல்லும் மகன்

இன்று (ஜூன் 27) ஒரு நம்பிக்கை மிகுந்த பதிவாக இச்செய்தியை உங்களுக்கு வழங்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. வாழ்க்கை எனும் நதியில் நீந்திச் செல்ல இந்த செய்தி உதவலாம்.

சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் Christine. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். Work Permit-ல் தான் இன்னமும் பணிபுரிகிறார். 18 வயதில் ஒரு மகனும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவர் கடந்த ஆண்டு வரை சிங்கப்பூரில் ஒரு ரெஸ்டாரண்டில் தான் வேலைப் பார்த்து வந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த ரெஸ்டாரண்ட் இழுத்து மூடப்பட, சிங்கப்பூரில் வேறு வேலை கிடைக்காமல், மீண்டும் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கே சென்றுவிட்டார்.

இந்த தகவல் அனைத்து Christine, சிங்கப்பூரின் பிரபல Mothership நிறுவனத்துக்கு அளித்த பேட்டி தான். சரி மீண்டும் செய்திக்கு வருவோம்.

வேலையின்றி கணவர் பிலிப்பைன்ஸ் போனதால், குடும்பத்தின் பாரத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு Christine தலையில் இறங்கியது. சிங்கப்பூரில் கிடைப்பது போல் வேறு எங்கும் அதிக அளவு ஊதியம் கிடைக்கவில்லை என்கிறார். எனவே, என் குடும்பத்தின் எதிர்காலம் கருதி நான் சிங்கப்பூரிலேயே தனியாக வசித்து வருகிறேன்.

மேலும் படிக்க – “அப்பா என்னை எழுந்து பாருங்க”.. சிங்கப்பூரில் dormitory-யில் அசைவற்று இருந்த வீரையன் – மகளிடம் Video Call-ல் Live-ஆக காட்டிய நண்பர்கள் – என்ன நடந்தது?

நான் சிங்கப்பூரில் Old Chang Kee எனும் நிறுவனத்தில் தான் பணிபுரிகிறேன். நல்ல வேளை எனது கணவருக்கு வேலை போனது போல் எனக்கு ஆகவில்லை. இல்லையெனில், என் குடும்பத்தின் நிலை என்ன ஆவது?

10 வருடத்திற்கு என் தாய் நாடான பிலிப்பைன்ஸை விட்டு சிங்கப்பூர் வந்தேன். என் பெற்றோரை, பிள்ளைகளை தனியே விட்டு வந்தேன். ஒவ்வொரு நாளும் என் பிள்ளைகளை நினைத்து நான் மனம் வெதும்புகிறேன். அவர்கள் என் அருகில் இல்லையே என்று நான் வருந்தாத நாட்கள் இல்லை. குடும்பம் ஒரு இடத்திலும், நீங்கள் ஒரு இடத்திலும் இருப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. ஒரேயொரு ஆறுதல் என்னவெனில், தினம் வீடியோ கால் பேசுகிறோம். அதில் தான் அவர்களை பார்க்கிறேன்.

26 வயதில் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தேன். இப்போது 36-ஐ தாண்டிவிட்டேன். குடும்பத்தை அருகில் வைத்துக் கொள்ளாமல்.. என் பிள்ளைகளின் வருங்காலத்துக்காக தான் நான் இப்படி தனியாக வாழ்ந்து கொண்டு சம்பாதிக்கிறேன். என் பெரிய மகன் என் கஷ்டத்தை புரிந்து கொண்டு, பிலிப்பைன்ஸில் படித்துக் கொண்டே வேலைக்கு செல்கிறான்.

சிங்கப்பூரில் வேலைப்பார்க்கும் கிறிஸ்டைன்

காலை கல்லூரிக்கு செல்வான்… மதியம் McDonald’s கடையில் பகுதி நேரமாக வேலை செய்கிறான். சமீபத்தில் எனக்கு ஃபோன் செய்து, ‘அம்மா நான் முதல் மாதம் சம்பளம் வாங்கிவிட்டேன்‘ என்று அவன் சொன்ன போது, நான் அடைந்த பெருமைக்கு அளவே இல்லை.

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அவனது இந்த சாதனை ஒரு தாயாக என் சாதனையைப் போன்றது. அவன் தன் முதல் சம்பளம் வாங்கியதைப் பற்றி என்னிடம் சொன்னபோது, நான் அவனிடம், “என்னால் எப்போதும் உங்களுக்கு மீன் பிடித்துக் கொடுக்க முடியாது, நீங்கள் சொந்தமாக மீன் பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், என்னால் எப்போதும் உங்களைப் பாதுகாக்க முடியாது, உங்கள் சிறகுகளை நீங்களே விரித்து பறந்து செல்லுங்கள். ஏனென்றால் அப்போதுதான் நீங்கள் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்” என்றேன்.

பிலிப்பைன்ஸ் எனது சொந்த நாடாக இருந்தாலும், குடும்பத்தை விட்டுப் பிரிந்து நாங்கள் கஷ்டப்பட்டாலும், இன்று நாங்கள் எங்கள் வாழ்க்கையை சீராக நடத்துவதற்கு கைக்கொடுக்கும் சிங்கப்பூர் தான் எனது இரண்டாவது தாய் நாடு என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்று முடித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts