TamilSaaga

சிங்கப்பூர் அரசின் “வாவ்’ ஐடியா… Resorts-களாக மாறும் பழைய பேருந்துகள் – இதனால் தான் சிங்கப்பூர்னாலே ஒரு கெத்தும், மரியாதையும் கிடைக்குது!

SINGAPORE: நமது சிங்கையில் வரும் 2023 இல் சாங்கி கிராமத்தில் ஒரு புதிய ரிசார்ட் திறக்கப்பட உள்ளது.

இதில், ஆச்சர்யம் என்னவெனில், சிங்கப்பூரில் இயக்கப்பட்ட பழைய பேருந்துகள் அனைத்து புனரமைக்கப்பட்டு, ஒவ்வொரு பேருந்தும் ஒவ்வொரு ரிசார்ட்டாக வடியவமைக்கப்பட உள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் இதுபோன்று பேருந்தை மாற்றி ரிசார்ட் ஆக்குவது என்பது இதுவே முதன்முறையாகும்.

LHN குரூப் மற்றும் ஸ்கை வின் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்து, WTS டிராவல் இந்த திட்டத்தை உருவாக்க உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது, இதை பிரதமர் அலுவலக அமைச்சரும், கல்வி மற்றும் வெளியுறவுத்துறைக்கான இரண்டாவது அமைச்சருமான மாலிகி ஒஸ்மான் தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க – Arms, Chest என Gym-ல் சிங்கப்பூர் Reporters-களை வியக்க வைத்த தமிழ் ஊழியர்களின் “Six Pack”

சாங்கி கிராமத்தின் நடைபாதை மையத்திற்குப் பக்கத்தில் உள்ள காலியான அரசு நிலத்தில் இந்த ரிசார்ட் அமைய உள்ளது.

தற்காலிகமாக ‘தி பஸ் ரிசார்ட்’ என்று அழைக்கப்படும் இந்த ரிசார்ட் 8,600 சதுர மீட்டர் நிலப்பரப்பில் அமைக்கப்பட உள்ளது. இதில், 20 விருந்தினர் அறைகளைக் கொண்டிருக்கும்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிக்கையின் படி, ஒவ்வொரு விருந்தினர் அறைக்கும் ஒரு இரவுக்கு S$300 முதல் S$400 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் இந்த ‘பஸ் ரிசார்ட்’ தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” செய்தித் தளத்தை Follow பண்ணுங்க

Related posts