TamilSaaga

சிங்கப்பூர் விமான பயணிகளிடம் தொடரும் அட்ராசிட்டிஸ்… ஏலே என்னல இப்படியா பண்ணுவீங்க… கடுப்படித்த சிங்கப்பூர் விமானி…

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பாலி விமானத்தினை விமானி தரையிறக்காமல் வானத்தில் வட்டமடித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

TR285 ஸ்கூட் விமானம் பாலியில் இருந்து சாங்கி விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. தரையிறங்க பயணிகள் தயாராக இருந்த நிலையில் விமானி தரப்பில் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அதில் சில பயணிகள் சீட்பெல்ட் போடாமல் அமர்ந்து இருக்கின்றனர். அதனால் என்னால் விமானத்தினை தரையிறக்க முடியாது. கேபின் பாதுகாப்பாக இல்லாத பட்சத்தில் விமானத்தினை தரையிறக்குவது சட்டப்படி குற்றமாகும் எனவும் கூறி இருந்தார்.

விமானியின் இந்த அறிவிப்புடன் இருந்த டிக்டாக் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் முடிவில் தரையிறங்கிய பயணிகளை போலீசார் பத்திரமாக அழைத்து செல்வதுடன் முடிந்திருந்தது.

இந்த வீடியோ குறித்து விளக்கமளித்துள்ள ஸ்கூட்டின் செய்தி தொடர்பாளர், இரண்டாவது முயற்சியில் தான் விமானம் பாதுகாப்பாக தரையிறங்க முடிந்தது. விமானத்தில் சேட்டை செய்த அந்த குறிப்பிட்ட பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும், விமான பயணத்தின் போது பயணிகளின் பாதுகாப்பிற்காக, சீட் பெல்ட் அணிவது கட்டாயம். புறப்படும் போதும், இறங்கும் போதும் சீட் பெல்ட் கட்டயாமாக அணிய வேண்டும்.

எங்கள் ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு தான் முக்கியம். அதற்கு பிரச்சனை தரும் எந்தவொரு பயணிக்கும் எதிராக ஸ்கூட் தகுந்த நடவடிக்கை எடுக்கும். இதனால் ஏறக்குறைய 30 நிமிடம் இறங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார். சமீபத்தில் சிங்கப்பூர் விமானத்தில் கேபின் க்ரூ ஊழியர்களுடன் சண்டையிட்ட பயணி விமானத்தில் பயணிக்கு தடை விதிக்கப்பட்டது நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts