TamilSaaga

ஏப்ரல் 1 முதல்… சிங்கப்பூர் வரும் short-term visitors-களுக்கு “சூப்பர்” தளர்வு – சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் #Exclusive அறிவிப்பு

நாளை (ஏப்ரல் 1) முதல், சிங்கப்பூருக்குள் நுழையும் குறுகிய கால பார்வையாளர்களில் (short-term visitors) முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கட்டாய பயணக் காப்பீடு இனி தேவையில்லை.

இது சுகாதார அமைச்சகத்தின் பொதுப் பயண வகை நாடுகளில் இருந்து (General Travel Category countries) விமானம், தரை மற்றும் கடல் எல்லைகள் மூலம் சிங்கப்பூருக்கு வருபவர்களுக்கு இது பொருந்தும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

12 வயது மற்றும் அதற்குக் குறைவான மற்றும் முழுமையாக தடுப்பூசி போடப்படாத குழந்தைகள், முழு தடுப்பூசி பெற்ற பெரியவர்களைப் போலவே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

இளம் வயதிலேயே கற்பழிப்பு.. கட்டுப்படுத்த முடியா “கோபம்”.. சிங்கப்பூரில் முதலாளியை கழிவறையில் வைத்து “94 முறை” குத்தி கொலை செய்த இளம் பெண்!

சிங்கப்பூரில் அவர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டாலோ அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டாலோ, குறுகிய கால பார்வையாளர்கள் தங்களுடைய மருத்துவ சிகிச்சைக்கான செலவை செலுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த, பயணக் காப்பீடு முன்பு தேவைப்பட்டது.

குறைந்தபட்சம் $30,000 வரை கவரேஜ் தேவைப்பட்டது. இதனை சிங்கப்பூர் அல்லது வெளிநாட்டில் உள்ள காப்பீட்டாளர்களிடமிருந்து பெறலாம் என்ற நடைமுறையும் இருந்தது. இந்நிலையில், குறுகிய கால பார்வையாளர்களில் (short-term visitors) முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கட்டாய பயணக் காப்பீடு இனி தேவையில்லை என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நாளை (ஏப்ரல்.1) முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள், Entry Approval இல்லாமல் சிங்கப்பூர் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பை நமது சிங்கை பிரதமர் லீ, கடந்த வாரம் வெளியிட்டார். இதற்காக சாங்கி விமான நிலையம் சிறப்பான முறையில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts