TamilSaaga

சிங்கப்பூரில் பூனைக்கு குடிநீருக்கு பதில் “சிறுநீர்” வைத்த நபர்.. தாகத்துடன் வாய் வைத்த பூனைக்கு “கொடுமை”- வாயில்லா ஜீவன் என்ன சார் பண்ணும்!?

சிங்கப்பூரில் Community cat ஒன்றுக்கு குடிப்பதற்கு குடிநீர் வைப்பதற்கு பதில் சிறுநீர் வைத்த நபரை தேடி வருகின்றனர்.

Singapore Cat Feeders இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவின் மூலம் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 27ம் தேதி, சிங்கப்பூரின் சைனா டவுன் பகுதியில், பூனை ஒன்றுக்கு உணவு வைக்கப்பட்டிருந்தது.

அதன் அருகில் ஒரு பாத்திரத்தில் நீரும் வைக்கப்பட்டிருந்தது. அந்த பாத்திரம் வழக்கமாக பூனை குடிநீர் குடிக்கும் பாத்திரமாகும். ஆனால், அன்றைய தினம் நீர் மஞ்சளாக இருந்தது. அதுமட்டுமின்றி, சிறுநீர் வாடையும் வீசியது.

இதுகுறித்து mothership தளம் சார்பில் விசாரிக்கப்பட்டதில், கடந்த ஞாயிறு அன்று காலை 7:30 – 8:30 மணியளவில் அந்த பூனைக்கு சிறுநீர் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த பாத்திரத்தில் மட்டுமின்றி, அதனைச் சுற்றியும் சிறுநீர் கழிக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பூரின் “மெட்ராஸ் சுவரா” இந்த Keppel Shipyard? – வெளிநாட்டு ஊழியர்களின் உயிரை தொடர்ந்து காவு வாங்குவது ஏன்? – நினைத்தாலே பதற வைக்கும் சம்பவங்கள்

இதில் கொடுமை என்னவெனில், அந்த பாத்திரத்தில் சிறுநீர் எப்படி கழிக்கப்பட்டது என்ற ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, யாராவது ஒருவர் மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து நேராக அந்த பாத்திரத்தில் சிறுநீர் கழித்தார்களா? என்று முதலில் சோதனை செய்யப்பட்டது. முடிவில், அப்படி செய்வதற்கு வாய்ப்பு குறைவு என்று mothership சார்பில் நினைக்க, வேறு கோணத்தில் யோசிக்கப்பட்டது.

முடிவில், யாரேனும் ஒருவர் இந்த பாத்திரத்திற்கு அருகே வந்து, குனிந்து அதில் சிறுநீர் கழித்திருக்க வேண்டும் அல்லது, வேறு எங்கேயோ சிறுநீர் கழித்து, அதை எதிலாவது பிடித்து வந்து ஊற்றியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆய்வு செய்தவர்கள் வந்தார்கள்.

என்ன கருமமோ! ஆனால், அந்த வாயில்லா ஜீவன் நிலைமை தான் பரிதாபம்!

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts