TamilSaaga

தமிழர்களுக்கு சிங்கப்பூரில் மிகவும் நெருக்கமான தேக்காநிலையம் மீண்டும் கோலாலமாக திறப்பு!

சிங்கப்பூரில் வாழும் தமிழர்களுக்கு நாம் தமிழ்நாட்டில் வாழ்ந்தது போன்ற உணர்வை அவ்வப்போது தருவது லிட்டில் இந்தியா மற்றும் தேக்கா. பெரும்பாலும் தமிழர்களின் முக்கியமான கோயில்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவை இந்த பகுதியை சுற்றி தான் இருக்கும். தேக்கா நிலையம் ஆனது புதுப்பிப்பு பணிகளுக்காக மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் முதல் தளம் இன்று திறக்கப்படுகின்றது.

முதல் தளத்தில் இருக்கும் உணவகங்கள் மற்றும் சந்தை ஆகியவையும் இன்று திறக்கப்படும் என அறிவித்துள்ளது. இங்குள்ள விளக்குகள், நாற்காலிகள், மேஜைகள், கழிப்பறைகள் மற்றும் தரைப்பகுதி ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளதால் பார்ப்பதற்கே ஜொலிப்புடன் காட்சியளிக்கின்றது.

மேலும் டேக்காநிலையம் திறக்கப்படுவதை கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காலை 10 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூர்வாழ் தமிழர்கள் தங்கள் மனதிற்கு பிடித்த தேக்கா போவதற்கு அடிக்கடி சென்று வரலாம்

Related posts