TamilSaaga

முடிவுக்கு வந்தது இரண்டாண்டு முடக்கம் : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அசத்தல் அறிவிப்பு – பலருக்கு இது “வரப்பிரசாதம்”

சிங்கப்பூரின் தேசிய விமான சேவை நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) சுமார் இரண்டு வருட முடக்கத்திற்குப் பிறகு தங்கள் விமானங்களுக்கான Cabin Crew ஆட்சேர்ப்பை மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் அது இப்போது அதன் இணையதளம் மூலம் அதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 12) CNAவின் கேள்விகளுக்குப் பதிலளித்த SIA செய்தித் தொடர்பாளர் “மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக” கேபின் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கம் செய்யப்படுகிறது என்றார்.

சிங்கப்பூர் “Work Permit” : போலி ஆவணம்.. முதலாளிக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளிக்கும் MOM வைத்த “ஆப்பு”

கடந்த பிப்ரவரி 2020ல் கோவிட்-19 தொற்றுநோய்க்குப் இணங்கும் வகையில் SIA விமான நிறுவனம் அனைத்து தரை நிலை ஊழியர்களுக்கான பணியமர்த்தலை நிறுத்தியது. மேலும் தங்களுக்கான செலவைக் குறைக்க அது எடுத்த மற்ற நடவடிக்கைகளில் கேபின் குழுவினருக்கு முன்கூட்டியே விடுவித்தல் அல்லது ஓய்வு வழங்குதல் ஆகியவை அடங்கும். SIA குழுமம் செப்டம்பர் 2020-ல் SIA, SilkAir மற்றும் Scoot – விமானத் துறையில் தொற்றுநோயின் தாக்கத்தின் அதன் மூன்று விமான நிறுவனங்களில் பதவிகளைக் குறைத்தது.

இந்நிலையில் இப்பொது “எங்கள் பெரும்பாலான விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்கள் SIA உடன் செயலில் பணிக்குத் திரும்பியுள்ளனர்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதை (VTL) ஏற்பாடுகள் காரணமாக, விமானப் பயணத்திற்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, SIA நிறுவனம் தனது திறனை “அளவீட்டு முறையில்” அதிகரித்து, அதன் பயணிகள் சேவைகளை சரிசெய்து வருகிறது என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

கடந்த செப்டம்பர் 2020ல் 4,300 பணியிடங்கள் நிறுத்தப்பட்டதால் அப்போது பாதிக்கப்பட்டவர்களுடன் தற்போது தொடர்பில் இருப்பதாகவும், நிறுவனத்தில் மீண்டும் சேர ஆர்வமுள்ள முன்னாள் கேபின் குழுவினரை தற்போது மீண்டும் விண்ணப்பிக்க அழைக்கிறோம் என்றும் SIA தெரிவித்துள்ளது. “அவர்கள் தகுதி மற்றும் வேலைக்கான தகுதியின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். சர்வதேச விமானப் பயணம் தற்போது மீண்டு வருவதால், வணிகத்தில் “தேவையான முதலீடுகளைத் தொடரும்” என்று SIA விமான நிறுவனம் கூறியது.

சிங்கப்பூர் இரவு நேர விடுதி : Customerகளுடன் நெருங்கி பழகிய 10 பெண்கள் கைது – அதில் ஒருவருக்கு என்ன ஆனது தெரியுமா?

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முடக்கநிலை நீங்கியுள்ளதால் பலருக்கு SIAவின் இந்த முடிவு பெரும் ஆறுதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தொற்று காலத்தில் வேலை இழந்த SIA பணியாளர்கள் பலரும் இப்பொது மீண்டும் SIAவில் இணைய ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமையும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts