TamilSaaga

சிங்கப்பூரில் யோகிபாபு கும்பிட்ட வீரமாகாளியம்மன் கோவில்.. ஆச்சரியமூட்டும் வரலாறு!

திரைத்துறையில் முன்னணி நடிகரான யோகி பாபு படப்பிடிப்புக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். திரைத்துறையில் யோகி பாபுவின் வளர்ச்சி அபரிவிதமானது. தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட் , டோலிவுட் என பல்வேறு துறைகளில் தன்னுடைய அபார திறமையால் கலக்கி கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் அவர் தற்போது சிங்கப்பூருக்கு, படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். இடைப்பட்ட நேரத்தில் சிங்கப்பூரில் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த வீரமாகாளி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துள்ளார். இந்த வீரமாகாளியம்மன் கோயிலின் வரலாறு அற்புதமானது. இது சிங்கப்பூரில் இருக்கும் பழம் பெரும் கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயிலை பற்றி சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த வீரமாகாளி அம்மன் கோயில் , சிங்கப்பூரில் serangoon ரோட்டில் அதாவது மினி இந்தியா எனும் இடத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த அம்மன் கோயில் ஆகும். இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களால் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். மேலும் இக்கோவிலை பற்றி விரிவாக பார்க்கலாம். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் இந்தக் கோயில் வெறும் சிலைகள் மட்டுமே இருந்தது. அந்த சிலைகளை இந்தியாவில் இருந்து கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்தனர்.

புலம்பெயர் இந்தியர்கள் இந்த கோயிலை தங்களுடைய பாதுகாப்பு அரணாக கருதினர். சொந்த நாட்டை விட்டு வேறொரு நாட்டில் வேலைக்கு வருபவர்களுக்கு துணையாக வீரமாகாளியம்மன் இருந்தாள். காலகட்டத்தில் இந்த கோயிலை சுண்ணாம்பு கம்பம் கோயில் என்று அழைத்தனர். ஏனென்றால் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் சுண்ணாம்பு சூலையில் வேலை செய்பவர்களாக இருந்தனர். இந்த கோயில் துர்க்கை அன்னை நடு நாயகமாக வைத்து இருக்கிறார். தீயவர்களை வென்று நல்லவர்களை வாழவைக்கும் கருணை கடலான காளி மாதா இந்த கோயிலில் அருள் பாலிக்கிறார்.

கோயிலின் வரலாற்றை சற்று புரட்டி பார்ப்போம், 1908 ஆம் ஆண்டு இந்த கோயிலில் மூலவர் சிலை அமைக்கப்பட்டது. அதன் பின் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் மற்றும் முருகன் சிலைகள் பிரதிஷ்ட செய்யப்பட்டது. 1938 ஆம் ஆண்டு கோயிலுக்கு என்று ரதம் வாங்கப்பட்டது. மேலும் 1953 ஆம் ஆண்டு கோயில் மேலும் விரிவாக்கப்பட்டது. சிங்கப்பூரில் வந்து குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அவர்கள் அனைவரும் இந்த கோயிலுக்கு நன்கொடைகள் வழங்கினர்.

கோவிலுக்கு வரும் நன்கொடை அதிகமானதால் கோயில் விரிவாகவும் பெரிதாகவும் கட்டப்பட்டது. 1980 களின் மேலாக கோயில் விரிவாக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தற்போது 2.2 மில்லியன் செலவழித்து கோயிலுக்கான பராமரிப்பு பணிகளும், 8 புதிய கோபுரங்களை மற்றும் சிறிய கோபுரங்கள் கேட் டவர் ஆகியவை கட்டப்பட்டது. இவை அனைத்தும் முடிய சுமார் மூன்று ஆண்டுகள் எடுத்தது. ஆரம்பத்தில் கோயிலுக்கென நன்கொடைகளும் அல்லது வருமானங்களும் பெரிதாக இல்லாத காலகட்டத்தில் கோவிலுக்கு நிரந்தரம் பூசாரி அமைக்கப்படவில்லை. ஆனால் இன்று கோவில் காளி மாதாவின் அருள் ஆசி உடன் நன்றாக கட்டப்பட்டு விஸ்தார பட்டு இருக்கிறது.

இந்த கோயிலை அமைத்த உடன் அதை சுற்றி இந்தியர்கள் பெரும்பாலானோர் குடியேறினர். குடியேறியது மட்டுமல்லாமல் அந்த கோயிலை சுற்றி அவர்களுடைய தொழிலை அமைத்துக் கொண்டனர். அந்தப் பகுதி மிகவும் பிரபலமானது, இந்த பகுதியை சுற்றி இந்தியர்கள் வசிப்பதால் இதை மினி இந்தியா என்று அழைக்கின்றனர். இந்த கோயிலை கட்டுவதற்கு இந்தியர்கள் மட்டுமல்லாமல் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்களும் நன்கொடை அளித்ததாக கூறப்படுகிறது ஆனால் தரவுகள் எதுவும் இல்லை.

இரண்டாம் உலகப் போரின் போது விமானம் தாக்குதல் நடைபெற்றது, அப்பொழுது மக்கள் அனைவரும் கோயிலில் தஞ்சம் அடைந்தனர். துர்க்கை மாதாவின் அருளால் கோவிலுக்கோ கோவிலில் தஞ்சமடைந்தவர்களுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் காப்பாற்றப்பட்டனர். இந்த கோயில் மிகவும் பிரபலமாக ஆனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

தற்போது இந்த கோயிலில் ஆகம விதிப்படி அனைத்து பூஜைகளும் முறையாக நடத்தப்படுகிறது. தினந்தோறும் நடக்கும் பூஜைகள் மட்டுமல்லாமல் முக்கிய நாட்களில் அதாவது விசேஷ நாட்களில் விமர்சையாக பூஜையில் நடத்தப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலில் தற்போது பெரியாச்சி அம்மன், விநாயகர், முருகன், காசி விசாலாட்சி, லட்சுமி துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி, விஸ்வநாதர், இடும்பர், ராமர், நாகர், பைரவர், சண்டிகேஸ்வரர் மற்றும் சனி பகவான் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. ஆகவே அனைத்து விசேஷங்களும் சுப நாட்களும் இங்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விசேஷ நாட்களில் இங்கு நடக்கும் சிறப்பான பூஜைகளில் கலந்து கொள்ள ஏராளமான இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

இப்படி ஒரு அருமையான கோயிலை தரிசிக்க ஒரு முறையாவது சொல்ல வேண்டும். நீங்கள் சிங்கப்பூரில் இருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக கோவிலுக்கு சென்று அம்மனுடைய அருளை பெற வேண்டும்.

Related posts