TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு வர கம்பெனி போட்டு கொடுத்துட்டாங்களா? பணத்தை கட்டுவதற்கு முன்பு உங்க கம்பெனி நம்பகமானதா என்று தெரிஞ்சிக்கணுமா?

சிங்கப்பூரில் வேலைக்கு வருவதற்கு முன் நாம் சில விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொண்டு வர வேண்டியது அவசியம். ஏனெனில், நீங்கள் பக்கத்துக்கு தெருவுக்கோ, பக்கத்துக்கு ஊருக்கோ செல்லவில்லை.. கடும் சட்டங்கள் நிறைந்த சிங்கப்பூர் எனும் பக்கத்துக்கு நாட்டுக்கு வர இருக்கிறீர்கள். ஸோ, உங்கள் வேலை தொடர்பான அனைத்து தகவல்களும் உங்கள் விரல் நுனியில் இருக்க வேண்டும்.

இதில், மிக முக்கியமானது உங்கள் கம்பெனி பற்றிய விவரங்கள். நீங்கள் வேலைக்காக அணுகிய ஏஜெண்ட்டோ அல்லது டெஸ்ட் அடித்த இன்ஸ்டிட்யூட்டோ உங்களுக்கு கம்பெனி போட்டு கொடுத்திருந்தால், அந்த கம்பெனி பற்றிய சகல விஷயங்களையும் நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

ஏஜெண்ட்டிடம் கேட்டால் அவர், ‘அது நல்ல கம்பெனி’ என்று தான் சொல்வார்.. ஏனெனில், அவர்களைப் பொறுத்தவரை உங்களை எப்படியாவது சிங்கப்பூருக்கு பேக் செய்து அனுப்பிவிட வேண்டும் என்பதே அவர்களது ஒரே குறிக்கோள். அதனால் கம்பெனி பற்றிய முழு Background தகவல்களையும் அவர்கள் தெரிந்து வைத்திருப்பது கடினம்.

அப்படியெனில், நாமே தான் முயற்சி எடுத்து நமக்கு offer கொடுத்திருக்கும் கம்பெனி பற்றிய தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு, ஸ்டெப் பை ஸ்டெப் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினாலே போதும்.

1, https://www.bca.gov.sg/ என்ற BCA-வின் இணையதளத்திற்குச் செல்லுங்கள். BCA என்பது Building and Construction Authority என்ற அமைப்பாகும். இந்த வெப்சைட் மூலம் நீங்கள் உங்கள் கம்பெனி பற்றிய தகவல்களை அறிய முடியும்.

2, வெப்சைட்டை ஓபன் செய்தவுடன், மேலே உள்ள மெனுவில் “e-Services” என்பதை க்ளிக் செய்து, அதில் “Business Info” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

3, இப்போது “Business Info” ஆப்ஷனுக்கு கீழ் இருக்கும் “Search for Contractors/ Builders/ Specialist Builders/ Resident Technical Officers (RTOs)” என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

4, இப்போது ஒரு புதிய பக்கம் ஓபன் ஆகும். ஆட்டத்தில், உங்கள் கம்பெனியின் பதிவு எண், கம்பெனியின் பெயர் அல்லது UEN (Unique Entity Number) ஆகியவற்றை அங்குள்ள “Search” ஆப்ஷனில் கொடுத்து க்ளிக் செய்ய வேண்டும்.

5, நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிறுவனம், முறையாக பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் அதன் தகவல்கள் முழுவதும் இந்த BCA தளத்தில் கிடைக்கும். அதாவது, அந்த கம்பெனியின் தற்போதைய பதிவு நிலை, நிதி நிலை, தரம் என்று சகலமும் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல்கள் மூலம், நீங்கள் எப்படிப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு வேலை செய்ய போகிறீர்கள் என்பதையும் அறிய முடியும்.

6, மேலும், பதிவு எண் அல்லது நிறுவனத்தின் பெயரைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் விரிவான தகவல்களை பார்க்க முடியும்.

7, இந்த தேடலின் போது, உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டாலோ அல்லது கேள்விகள் இருந்தாலோ, BCA இன் வாடிக்கையாளர் சேவை ஹாட்லைனை +65 6248 9999 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம் அல்லது bca_enquiry@bca.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

8, மிக முக்கியமான விஷயம் என்னவெனில், உங்கள் கம்பெனி முறையாக சிங்கப்பூரில் பதிவு செய்திருந்தால் மட்டுமே, இங்கு காண முடியும். ஒருவேளை உங்களால் எந்த தகவலையும் பார்க்க முடியவில்லை எனில், உங்கள் கம்பெனி பதிவு செய்யவில்லை என்று அர்த்தம். அப்படியிருந்தால், உடனடியாக நீங்கள் உங்கள் ஏஜென்ட்டை அணுக வேண்டும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts