கடந்த சில வாரங்களாக புகை மூட்டத்தால் அவதிப்பட்டு வந்த சிங்கப்பூர் மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த இரண்டு வாரங்களுக்கு புகை மூட்டத்தின் அளவு கட்டுப்படும் எனவும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு ஆசியாவின் தென் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிங்கப்பூரிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழையானது புகை மூட்டத்தினை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும் எனவும் நம்ப படுகின்றது. மேலும் சிங்கப்பூரில் இதுவரை சூடான வானிலை நிலவி வந்த நிலையில் அடுத்து வரும் வாரங்களில் பெய்யும் மழையானது குளிர்ச்சியான சூழ்நிலையை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெரும்பாலும் பகல் நேரங்களில் மழை பெய்யும் எனவும் அதுவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இம்மாதத்தின் முதல் பாதியில் பதிவான வெப்பநிலையை விட அடுத்த 15 நாட்களுக்கு வெப்பநிலை குறைவாகவே பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.