TamilSaaga

“பொறுப்புடன் செயல்படும் சிங்கப்பூரர்கள்” – சீனப்புத்தாண்டுக்கு “இதையும்” அதிக அளவில் வாங்குறாங்களாம்!

சிங்கப்பூரில் சீன புத்தாண்டு நெருங்கி வரும் இந்த வேளையில் மக்கள் பாக் குவா மற்றும் அன்னாசிப் பழங்களை மட்டும் அதிக அளவில் வாங்கவில்லை என்றும் மாறாக அவர்கள் சீனப் புத்தாண்டை முன்னிட்டு வீடியோ கேம் கன்சோல்கள், ART பெருத்தொற்று சோதனை கருவிகளையும் வாங்குகிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது. லாசாடா, ஷாப்பி மற்றும் அமேசான் போன்ற பல ஈ-காமர்ஸ் தளங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு “ஹாட்பாட்” செட்கள் உள்ளிட்ட பிரபலமான சில பொருட்களுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளன தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : Breaking: சிங்கப்பூரில் விளையாட்டு பூங்காவில் இரு மகன்களையும் கொன்று வீசிய தந்தை – உதவிக்காக அலறி உயிரிழந்த பரிதாபம்!

“ART சுய-பரிசோதனை கருவிகள் வாங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது, சிங்கப்பூரர்கள் புத்தாண்டை வரவேற்கும் அதே நேரத்தில், ​​அவர்கள் பொறுப்புடனும், கோவிட்-19 வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்” என்று லாசாடா தலைமை நிர்வாக அதிகாரி திரு லோ வீ கூறினார். தொற்றுநோயைக் கையாளும் பல அமைச்சக பணிக்குழு கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) வெளியிட்ட அறிக்கையில், ஒரு வீட்டிற்கு அதிகபட்ச பார்வையாளர்களின் எண்ணிக்கை ஐந்தாக இருக்கும், இது கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட வரம்பு என்று அறிவித்தது.

மேலும், தற்போதுள்ள பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள், உணவகங்களில் உணவருந்துவதற்கான குழு அளவுகளை ஐந்து நபர்களாக உள்ள நிலையில், சீனப் புத்தாண்டு காலத்தில் அதே அளவு தான் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் பணிக்குழு தெரிவித்துள்ளது. ST பல ஈ-காமர்ஸ் தளங்களைத் தொடர்பு கொண்டு பேசியபோது, சுய-சோதனை கருவிகள் போன்ற சில பொருட்களுக்கு அதிக தேவை இருப்பதாகக் கூறியது.

இதையும் படியுங்கள் : “கிட்னி” கொடுத்து உயிரைக் காப்பாற்றிய காதலன் – ஒரே மாதத்தில் “டாட்டா” காட்டி வேறொருவரை மணந்த காதலி – பெருகும் ஆதரவு!

கடந்த வெள்ளிக்கிழமை, பணிக்குழு வெளியிட்ட தகவலில் குடும்ப உறுப்பினர்களை மற்றும் மூத்தவர்களான உறவினர்களைப் பார்க்கச் செல்வதற்கு முன் சுய-நிர்வாகம் ART எடுக்க ஊக்கப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் சிங்கப்பூரின் சைனாடவுனில் வருடாந்திர சீன புத்தாண்டு பஜார் ரத்து செய்யப்படுவதால், இரண்டாவது ஆண்டாக கொண்டாட்டங்கள் குறைக்கப்படும் என்றும் கூறியது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts