சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் “கேண்டியர் சிஸ்டம்ஸ்” என்ற நிறுவனத்துடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தற்பொழுது கையெழுத்திட்டுள்ளது தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம். இதனையடுத்து கேண்டியர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் Strategy & Business Development தலைவரான ரவி ராமராவ் அவர்களும், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சந்திரமௌலி அவர்களும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தற்பொழுது கையெழுத்திட்டு அந்த ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் அதிகரிக்கும் மின்-கழிவுகளின் மறுசுழற்சி
மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் சாஸ்திர கணினி அறிவியல் துறையில் “சாஸ்த்ரா கேண்டியர்” என்ற சிறப்பு மையம் ஒன்று நிறுவப்பட உள்ளது. இந்த புதிய மையத்தின் மூலம் பல முன்னெடுப்புகள் தொடங்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் Industrial Internet of Things, Artificial Intelligence, Computer Learning, Product Solutions & their integrated data analysis, Specialization or optimization மற்றும் specialization focus on various aspects of machinery and manufacturing processes உள்ளிட்ட பல தலைப்புகளில் ஆய்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இயக்குனர் மற்றும் CMIO ரவிசங்கர் ராமகிருஷ்ணன் அவர்கள் உள்பட பல அறிஞர் பெருமக்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.