சிங்கப்பூரில் பெர்மனன்ட் ரெசிடெண்ட் விசா என்று அழைக்கப்படும் PR விசாவில் தங்கி இருக்கும் பல பேர், மறு நுழைவு அனுமதி இன்றி தாய் நாட்டிற்கு சென்றதால் அவர்களின் PR ரத்தாகியுள்ளது. வருடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு சதவீதம் பேர் இச்சூழலையின் கீழ் PR தகுதியை இழப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால், மொத்த PR மக்களின் எண்ணிக்கை கணக்கில் கொள்ளும் பொழுது இந்த எண்ணிக்கையானது மிக குறைவு என்றும் தெரிவித்துள்ளது.
ஜூன் 2022 ஆண்டி வரை சிங்கப்பூரில் வசிக்கும் மொத்த PR மக்களின் எண்ணிக்கை 5,20,000 என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தற்பொழுது உள்ள சட்டத்தின்படி PR விசாவில் உள்ளவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் சிங்கப்பூருக்கு திருப்பி வருவதற்கு மறு நுழைவு அனுமதி முறையாக பெற வேண்டும். ஒருவேளை காலாவதியான மறு நுழைவு அனுமதி உடன் PR ஒருவர் வெளிநாட்டில் தங்கி இருந்தால் அவர் தாமாகவே PR தகுதியினை இழந்து விடுவார் என்று சட்டம் குறிப்பிடுகின்றது.
மீண்டும் அவர் மறு நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்படும். PR தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் மேல் முறையீடு செய்யும் பட்சத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் உரிமையை நீக்கவும் அரசிற்கு உரிமை உண்டு. அச்சுழ் நிலையில் ஒருவரின் PR தகுதி ரத்து செய்யப்பட்டால் மறுபடியும் அவரால் அரசாங்கத்திடம் மேல்முறையீடு செய்ய முடியாது. எனவே, தமிழகத்தில் இருக்கும் மக்கள் சிங்கப்பூரில் PR விசாவின் கீழ் தங்கி இருந்தால், தாய் நாட்டிற்குச் செல்லும் பொழுது முறையான அனுமதிகள் பெற்ற பின் செல்லவும்.