TamilSaaga

Big Breaking : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து ரத்தாகும் திருச்சி – சிங்கப்பூர் இருமார்கமான விமான சேவை

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக Omicron வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் சில விமான போக்குவரத்துக்கு நிறுவனங்க தமிழகத்திற்கான தங்கள் சேவையை ரத்து செய்தது. சில நாட்களுக்கு முன்பு திருச்சி – சிங்கப்பூர் விமான சேவையை Indigo நிறுவனம் ரத்து செய்தது நினைவுகூரத்தக்கது. மேலும் அடுத்த மாதம் பிப்ரவரி 16, 2022 சென்னையில் இருந்து மும்பை வழியாக சிங்கப்பூர் செல்லவிருந்த Vistara விமான சேவையும் ரத்தாகியுள்ளது.

இதெல்லாமா TikTokல போடுவாங்க? – சிங்கப்பூரில் முதியவரை குளிப்பாட்டும் வீடியோவை TikTokல் போட்ட பணிப்பெண்

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி திருச்சி சிங்கப்பூர் மார்க்கமாக 8 பிப்ரவரி 2022 மற்றும் 10 பிப்ரவரி 2022 அன்று இயக்கப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே போல சிங்கப்பூரில் இருந்து 9 பிப்ரவரி 2022 மற்றும் 11 பிப்ரவரி 2022 ஆகிய தேதிகளில் திருச்சி செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கான காரணம் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

அதே போல சிங்கப்பூரில் இருந்து 9 பிப்ரவரி 2022 மற்றும் 11 பிப்ரவரி 2022 ஆகிய தேதிகளில் திருச்சி செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ரத்து சம்மந்தமான காரணம் குறித்து நந்தனா ஏர் டிராவல்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாடிக்கையாளர் சேவை மையத்திடம் கேட்டபோது “Flight Operation” தொடர்பான சிக்கல் இருப்பதாகவும் கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts