TamilSaaga

“அவர்கள் பல தியாகங்களை செய்கின்றனர்” : புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாராட்டிய சிங்கப்பூர் அமைச்சர்

இன்று உலக அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது, இன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பல சிறப்பான ஏற்பாடுகளும் சிங்கப்பூரில் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய மனிதவள அமைச்சகம் அமைச்சர் டான் சீ லெங் வெளியிட்ட காணொளியில் பின்வருமாறு பேசியுள்ளார். “புலம்பெயர்ந்த எங்கள் ஊழியர் நண்பர்களுக்கு வணக்கம்!, அனைத்துலக புலம்பெயர்ந்தோர் ஊழியர் தினம் உலகின் வெவ்வேறு பகுதிகளில், அந்நாட்டின் மேம்பாட்டிற்கு குடிபெயர்ந்த ஊழியர்கள் ஆற்றும் பங்களிப்பை புலம்பெயர்ந்த ஊழியர்கள் தினமாக கொண்டாடுகிறது”.

இதையும் படியுங்கள் : ஊழியர்களுக்கு 1000 டாலரை அள்ளிக்கொடுத்த நிறுவனம்

“சிங்கப்பூரும் அதற்கு விதிவிலக்கல்ல, சொந்த நாட்டில் உள்ள தன் குடும்பத்தினருக்கும் இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்தில் சிங்கப்பூருக்கு வரும் நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்க தியாகங்களை செய்கின்றார்கள். இவ்வாண்டின் கருப்பொருள் “நம் கைகளை ஒன்றிணைப்போம், பந்தங்களை உருவாக்குவோம்” என்பதே. சமூகத்தினர் அனைவரும் ஒன்றுகூடி இந்த சிறப்பான நிகழ்வை உங்களுடன் கொண்டு வருவதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்”.

“தொழிலாளர்களாகிய பலர் உங்கள் தங்கும் விடுதிகளில் அல்லது பொழுதுபோக்கு மையங்களில் கொண்டாட்டங்களில் பங்கேற்று இருப்பீர்கள். தங்கும் விடுதி நடத்துனர்கள், அரசாங்க சார்பற்ற அமைப்புகள், முதலாளிகள் மற்றும் இளைஞர்கள் குழுக்கள் கூடி இந்த கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்” என்று அவர் கூறினார்.

“புலம்பெயர்ந்த தொழிலாளர்களாகிய உங்களில் சிலர் சமீபத்தில் மெரினா பே போன்ற இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கலாம். மேலும் புலம்பெயர்ந்த தொழிலார்களின் நலனை கவனித்துக் கொண்டு அவர்களுக்கு ஆதரவும் அளிக்கின்ற எங்கள் FACE மற்றும் இதர அமைப்பினருக்கு நான் எங்கள் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.” “தொற்றுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும், அதே வேளையில் நமது சுகாதார விதிமுறைகளை அவ்வப்போது சரிசெய்ய வேண்டி இருக்கலாம்.” “இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். இதுவரை எங்கள் மீதான உங்கள் பொறுமைக்கு நம்பிக்கைக்கும் நன்றி கூறுகிறேன்.”

“இந்த சவால் மிக்க காலத்தை நாம் கடக்க உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் தொடரும் என நம்புகிறோம். நாம் அனைவரும் விழிப்புடனும் பாதுகாப்போடும் இருப்போமாக” என்று அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts