TamilSaaga

பலருக்கு வாழ்க்கை கொடுக்கும் சிங்கப்பூரில் சில நிமிடங்கள் நீங்க இருக்க வாய்ப்பு கிடைச்சா? வெளிநாட்டு ஊழியரா வாழ்ந்துட்டு decide பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்

சிங்கப்பூரில் வேலை செய்யலாம் என்ற ஐடியாவில் இருக்கீங்கனா? இங்குள்ள வாழ்க்கை எப்படி இருக்கும். ஊழியர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள். உண்மையிலேயே சிங்கப்பூர் வாழ்க்கை சொர்க்கம் தானா தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் முடிவை எடுங்க.

சொந்த நாட்டில் சம்பள குறைப்பாடு ஏற்படும் போது பலரின் முதல் எண்ணமாக இருப்பது வெளிநாடு செல்லலாமல் என்பது தான். இதற்காக ஏஜென்ட் சிலர் நாடுவார்கள். படித்திருந்தால் S-Passல் 4 லட்சத்துக்கும் அதிகமாக காசை கட்டி சிங்கப்பூர் வந்துவிடுவார்கள். கஷ்டப்படுபவர்களும், பெரிய படிப்பு படிக்காதவர்களுக்கும் இருக்கும் இரண்டு வாய்ப்பு. pcm permit மற்றும் work permit தான்.

இதில் இரண்டுக்குமே ஏறக்குறைய ஒரே மாதிரியான சம்பளம் தான் என்றாலும் pcm permitல் வரும் ஊழியர்களுக்கு கம்பெனி தரப்பில் நிறைய பிடித்தங்கள் இருக்கும். இதனால் சம்பளம் சிறிதளவில் மாறுப்படும். அதுப்போல 2 வருடம் முடிந்து நீட்டிக்கப்படுமா என்பதிலும் சந்தேகம் தான். வொர்க் பெர்மிட் என்றால் இந்திய இன்ஸ்ட்யூட்களில் படித்து விட்டு skilled test முடித்து அதன்மூலம் சிங்கப்பூர் வருவது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வாய்ப்புகளை குவிக்கும் Electrical Skilled Test… நீங்க கட்டுற ஒவ்வொரு பணமும் வீணாகாது – இதை படிங்க சீக்கிரம் Flightஐ பிடிக்கலாம்!

ஏகப்பட்ட செலவுகள் முடித்து விட்டு சிங்கப்பூர் வந்த முதல் 2 வாரங்களுக்குள் SOS வகுப்பு மற்றும் சிங்கப்பூர் மெடிக்கல் செக்கப் முடிக்கப்படும். அதை தொடர்ந்து உங்களின் கைரேகை, retina தகவல்கள் எடுக்கப்பட்டு வொர்க் பாஸ் கொடுத்து விடுவார்கள். இதன் பிறகே security bond ஆக்டிவேட் செய்யப்படும். 14 நாட்களுக்குள் இது முடிக்கப்படாத பட்சத்தில், உங்கள் பெர்மிட் கேன்சல் செய்யப்பட்டு விடும்.

முக்கியமாக SOS வகுப்பில் சொல்லி கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள். வேலை செய்யும் இடத்தில் இதை தவறும்பட்சத்தில் உங்களுக்கு ஃபின் போட்டுவிடுவார்கள். அது $100 சிங்கப்பூர் டாலர்கள் வரை இருக்கும். இதை கம்பெனி செலுத்திவிட்டு உங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்து கொள்வார்கள். அதனால் எப்போது இதை மறக்காம follow பண்ணிடுங்க.

மேலும் 8 மணி நேர வேலைக்கு நீங்க செல்ல அதிகாலையிலேயே உங்களை அழைத்து செல்ல வாகனம் வந்துவிடும். அதனால் தூக்கத்தினை மறந்துவிடுங்கள். 4 மணி நேர OT பார்ப்பதை வழக்கமாக்கி கொள்வார்கள். இதன்மூலம் உங்களுக்கு 1.5 மடங்கு சம்பளம் கிடைக்கும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை தேடுறீங்களா? என்ன செய்யணும் ஒரே குழப்பமா இருக்கா… skilled testல வேலை கிடைக்க இந்த ரூட்டை follow பண்ணுங்க

இதனால் கிட்டத்தட்ட உங்களுக்கு $800 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளம் கிடைக்கும். சாப்பாட்டிற்கு ஹோட்டல்களில் சாப்பிடாமல் சமைத்து கொடுக்கும் இடங்களில் மெஸ் போன்று இருப்பதில் பதிந்து கொள்ள வேண்டும். மூன்று வேலைக்கும் சேர்த்து $120 சிங்கப்பூர் டாலர் வரை செலவுகள் இருக்கும். இதில் அப்போ அப்போ வெளியில் சாப்பிடும் பட்சத்தில் $50 சிங்கப்பூர் டாலர் மேலும் செலவுகள் ஆகும்.

இதை தொடர்ந்து மாத செலவுகளும், மொபைல் செலவுகளுக்கும் $100 சிங்கப்பூர் டாலர் வரை ஆகும். MOM தரப்பில் இந்த பெர்மிட்டிக்கு சம்பளமாக $1200 சிங்கப்பூர் டாலர் கொடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும் பெரும்பாலான கம்பெனிகள் அதை கொடுப்பதில்லை. அதிகபட்ச சம்பளமே இதில் இரண்டில் ஒரு மடங்கு தான் கொடுக்கப்பட்டு வருகிறது.

இப்படி தான் பெரும்பாலான சிங்கப்பூர் ஊழியர்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இதனால் 2 முதல் 2.5 வருஷம் வேலை செய்தால் மட்டுமே அவர்களால் சொந்த நாட்டில் வாங்கி இருக்கும் கடனை அடைக்க முடியும். மேலும், வொர்க் பெர்மிட்டில் வந்தவர்கள் கஷ்டம் பார்க்காமல் டிப்ளமோ சிங்கப்பூரில் படித்தால் கண்டிப்பாக வேறு வேலைக்கு மாறும் போது நல்ல ப்ரோமோஷனுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். இப்போ யோசித்து பாருங்கள்.

இது வேலை செய்பவர்களுக்கு சொர்க்க புரியாக இருந்தாலும் ஒரு நாள் கூட ஓய்வு இருக்காது. ஞாயிறுகளில் 1.5 அல்லது 2 மடங்கு சம்பளம் கொடுத்து மட்டுமே உங்களை வேலை செய்ய சொல்ல வேண்டும். இதைக் கூட சில கம்பெனிகள் தவறிவிடுகின்றனர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts