தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் வில்லிவாக்கம் ஏரி (Villivakkam lake) உள்ளது. இது 36.34 ஏக்கர் பரப்பளவிற்குப் பரந்து விரிந்து பரவியுள்ள ஏரியாகும். வில்லிவாக்கத்திற்கு தெற்குப் பகுதியிலும், அதிக மக்களடர்த்தியைக் கொண்ட சிட்கோ நகருக்கு அருகாமையிலும் இது அமைந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஏரியை மறு சீரமைப்ப செய்து பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. ஸ்மார் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.37 கோடி செலவில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏரியைச் சுற்றி வாக்கிங் போக வசதி, பார்க், குழந்தைகளுக்கான ரயில், விளையாடும் இடங்கள், திறந்தவெளி தியேட்டர்கள், LED விளக்குகள் ஆகிவைகள் அமைக்கப்படுகிறது. எல்லாவற்றையும் விட ஒரு சூப்பர் அம்சமாக ஏரியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு செல்லும் வகையில் 250 அடியில் தொங்கு பாலம் (Suspension Bridge) அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் ஸ்பெஷல் என்னவெனில், சிங்கப்பூரில் உள்ள தொங்கு பாலத்தை மாதிரியை வைத்து தான் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் இரு கரைகளிலும் தண்ணீருக்கு மிக அருகில் உணவகங்கள் அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் பாலத்தில் இருந்து கீழே இறங்கி உணவகத்தில் உணவு அருந்து வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. (சூப்பர்ல!)
அதுமட்டுமின்றி இந்த தொங்கு பாலத்தின் நடைபாதை முழுவதும் கண்ணாடியில் அமைக்கப்பட்டுள்ளது. ஸோ, அதன் மேல் நடக்கும் போது பொதுமக்கள் தண்ணீரை ரசித்துக் கொண்டே செல்லலாம். நிச்சயம் ஒரு த்ரில் அனுபவமாக இது இருக்கும். இப்போது இந்த அனைத்து பணிகளும் ஏறக்குறைய முடிவடைந்து பெயிண்ட் அடிக்கும் வேலை மட்டும் பாக்கி உள்ளது.
இந்த தொங்கு பாலம் திறக்கப்பட்டால் சென்னையின் அடையாளமாக இது நிச்சயம் மாறும் என்பதில் சந்தேகமில்லை. அதுவும், நம் சிங்கப்பூர் மாடலில்!