TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு வர முயற்சி பண்றீங்களா? ஜஸ்ட் 4 மாதம் வெயிட் பண்ணுங்க.. இந்த Pass-ல் $5000 முதல் சம்பளம் – ஊதிய உயர்வுடன் அமலாகும் புதிய விதிமுறை!

சிங்கப்பூரில் அதிக சம்பளம் பெற்றுத் தரும் Pass-களில் மிக முக்கியமானது Employment Pass (EP). அதன் சம்பள நடைமுறைகளில் விரைவில் பல மாற்றங்களை சிங்கப்பூர் அரசு மேற்கொள்ளவிருக்கிறது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் இந்த செய்தியில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

வரும் செப்டம்பர் 1, 2023 முதல் இந்த புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன.

அதன்படி, வரும் செப்.1 முதல் நிதித்துறை அல்லாத துறைகளில், E-Pass-க்கு புதிதாக விண்ணப்பிக்கும் அல்லது Renewal செய்யும் ஊழியர்களுக்கு 45 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில், அவர்களின் அடிப்படை தகுதிச் சம்பளம் $10,500 டாலர்கள் வரை இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் மனிதவளத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த செய்தியை நீங்கள் படிக்கும் இந்த நிமிடம் வரை, நிதித்துறை அல்லாத துறைகளில் E-pass விண்ணப்பிப்பதற்கான அல்லாத Renewal செய்வதற்கான அடிப்படை தகுதிச் சம்பளம், 45 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு $8,400 டாலராக இருந்தது. தற்போது அந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதுவே நிதித் துறைகளில் E-Pass-க்கு புதிதாக விண்ணப்பிக்கும் அல்லது Renewal செய்யும் ஊழியர்களுக்கு 45 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில், அவர்களின் அடிப்படை தகுதிச் சம்பளம் $11,500 டாலர்கள் வரை இருக்க வேண்டும் என்று மனிதவளத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தற்போது வரை Renewal செய்பவர்களுக்கான அடிப்படை தகுதிச் சம்பளம் $9,300 டாலராக இருந்த நிலையில், செப்.1 முதல் அந்த தொகை அதிகரிக்கப்படுகிறது.

அதேபோல், 23 வயது முதல் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், வரும் செப்.1 முதல் புதிதாக E-Pass-க்கு விண்ணப்பித்தாலோ அல்லது Renewal செய்தாலோ அவர்களது அடிப்படை தகுதிச் சம்பளம் குறைந்தபட்சம் $5000 முதல் $5500 டாலர்கள் வரை இருக்க வேண்டும் என்றும் மனிதவளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

E-Pass-க்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை சம்பள தொகை அதிகரிக்கப்படுவதால், நிறுவனங்களிலும் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தான் மனிதவளத்துறை அமைச்சகம் நிர்ணயித்துள்ள புதிய சம்பள அளவுகோலை ஊழியர்களால் எட்ட முடியும். கையில் தரமான டிகிரியும், அதற்கேற்ற பணி அனுபவமும் உள்ளவர்கள், செப்.1 முதல் சிங்கப்பூரில் E-பாஸ்க்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு புதிய நடைமுறையின் படி, அதிக சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts