TamilSaaga

சிங்கப்பூரில் பசை பொறிகள்.. “ரண வேதனை அனுபவித்து இறக்கும் விலங்குகள்” – வேண்டுகோள் விடுக்கும் ACRES

சிங்கப்பூரில் “Glue Traps” எனப்படும் பசையை அடிப்படையாக கொண்ட பொறிகள் தான் பலருக்கு எலிகள் போன்ற விலங்குகளை பிடிக்க மிகவும் சுலபமான வழியாக இருந்து வந்தது. ஆனால் அதே விலங்கு பொறிகள் தற்போது பல விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மரணப்பொறிகளாக மாறி வருகின்றது. இன்றளவும் சிங்கப்பூரில் இந்த பசை பொறிகளைப் பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் நாம் அவற்றைப் பயன்படுத்த வேண்டுமா?

இதையும் படியுங்கள் : ஆதரவு கரம் நீட்டியது நமது சிங்கப்பூர்

பசை பொறிகளால் கொல்லப்பட்ட விலங்குகளின் சில புகைப்படங்களை வெளியிட்டு, பொது மற்றும் பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனங்களின் உறுப்பினர்களை இந்த பசை பொறிகளுக்கு மனிதாபிமான மாற்றுகளைத் தேடுமாறு வலியுறுத்தியது சிங்கப்பூரை சேர்ந்த ACRES எனப்படும் Animal Concerns Research & Education Society வேண்டுகோள் விடுத்துள்ளது. அவர்கள் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் சொர்க்க மர பாம்பு, மலைப்பாம்பு மற்றும் ஆந்தை ஆகியவற்றின் சடலங்களைக் காட்டுகின்றன என்பது வேதனையளிக்கின்றது.

Acres நிறுவனம் அவர்களின் முகநூல் பதிவில், பசை பொறிகள் கண்மூடித்தனமானவை, கொடூரமானவை மற்றும் பிரச்சனையின் வேரைச் சமாளிக்கத் தவறியவை என்று எடுத்துரைத்துள்ளது. மேலும் அந்த பதிவில் “GlueTraps மட்டுமே எலிகள் போன்ற கொறிக்கும் பிராணிகளின் பிரச்சினையை தீர்க்க ஒரே வழி என்பதை ஏற்க முடியாது”. “அதே நேரத்தில் எலிகளுக்காக வரும் பாம்புகள் போன்ற வேட்டையாட இடமாற்றம் செய்து தீவைச் சுற்றிச் செல்லுங்கள், இந்தச் சூழ்நிலைகளை நாம் எப்படிக் கையாளுகிறோம் என்பதில் ஏதோ அடிப்படைத் தவறு உள்ளது” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

பசை பொறிகளை நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான சில காரணங்கள் இதோ.. முதலில் பசை பொறிகள் கண்மூடித்தனமானவை, பசை பொறிகள் கொடூரமானவை, இதில் சிக்கிக் கொள்ளும் விலங்குகள் தாழ்வெப்பநிலை, மன அழுத்தம், நீரிழப்பு மற்றும் பட்டினி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன மேலும் கொடூரமான முறையில் இறக்கின்றன. மேலும் – பசை பொறிகள், பிரச்சனையின் மூல காரணத்தை நிவர்த்தி செய்யாது. பசை பொறிகள் விலைகுறைவானவை தான் ஆனால் அதற்கான உண்மை பொருளை விலங்குகள் தான் அளிக்கின்றன என்று Acres தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts