TamilSaaga

Exclusive: சிங்கப்பூர் to திருச்சி செல்ல “ஜஸ்ட்” ரூ.40 ஆயிரம் – ஒரு குடும்பமே சென்றால் 2 லட்சம் “காலி” – எகிறிய Ticket Demand

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் அனைத்து விமான நிறுவனங்களின் விமானங்களிலும் மே மாதம் இறுதியிலிருந்து ஜூன்.10ம் தேதி வரை டிக்கெட் விலை கட்டுக்கடங்கா நிலைக்கு சென்றுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்கூட் என அனைத்து விமானங்களிலும் ஒருசில நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. டிக்கெட்டின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.40,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திருச்சியில் இயங்கி வரும் நந்தனா ஏர் டிராவல்ஸ் நிறுவனம் நமது தமிழ் சாகாவிடம் தெரிவித்துள்ளது.

இவ்வளவு அதிகமாக டிக்கெட் விலை விற்கப்படுவதற்கு காரணம், பள்ளிகளின் கோடை விடுமுறை காரணமாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றவர்கள் இப்போது மெல்ல மெல்ல இந்தியா திரும்பி வருகின்றனர். ஏனெனில், ஜூன் மாதம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் தற்போது குடும்பம் குடும்பமாக சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பி வருகின்றனர்.

இதுவொரு காரணம் என்றால், சிங்கப்பூரில் ஜூன் மாதம் பள்ளிகளுக்கு விடப்பட இருப்பது மற்றொரு காரணமாகும். இதன் காரணமாக, சிங்கப்பூரில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்துடன் தமிழகம் செல்ல டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர். ஒருசில நாட்களுக்கு டிக்கெட்டுகள் முற்றிலும் விற்றுத் தீர்ந்துவிட்டது.

மேலும் படிக்க – 6,600 பணியிடங்கள்.. 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்.. கடந்த 2 ஆண்டுகளில் சிங்கப்பூரின் மாபெரும் “நேர்காணல்” அறிவிப்பு

சீட்டுகள் மிக அதிகமாக புக்கிங் ஆவதால், அதன் கட்டணமும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தற்போது வரை அதிகபட்சமாக ரூ.40,000 வரை டிக்கெட் விற்பனையாகிறது. அப்படியெனில், ஒரு குடும்பத்தில் 5 பேர் பயணம் செய்கிறார்கள் எனில் 2 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும் (!).

அதுமட்டுமின்றி, இதில் பெரிய சிக்கல் என்னவெனில் சமீபத்தில் சிங்கப்பூர் வந்த பயணிகள் சிலர், தமிழகம் திரும்பிச் செல்ல டிக்கெட் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அதில் சிலரது விசாக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், இன்னமும் அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. Heavy Ticket Demand இதற்கு காரணமாக உள்ளது. ஒருபக்கம் தாறுமாறாக உயரும் டிக்கெட் விலை, மறுபக்கம் டிக்கெட் டிமாண்ட் என்று சிங்கப்பூர் – திருச்சி டிக்கெட் புக்கிங்கில் ஏகப்பட்ட சிக்கல்களும், குளறுபடிகளும் தற்போது நிலவி வருகிறது.

News Source: Nandana Air Travels

விமான டிக்கெட் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
97 91 477 360

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts