TamilSaaga

“சிங்கப்பூர் சிட்டி ஹால் MRTயிலிருந்து, Funan-க்கு நிலத்தடி பாதசாரி இணைப்பு பாதை” – இந்த டிசம்பரில் திறக்கப்படும்

சிங்கப்பூர் Funan அருகிலுள்ள இடங்களுடன் இணைக்கும் மக்களால் “அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட” பாதசாரி இணைப்பு இந்த மாதம் (டிசம்பர் 2021) திறக்கப்படும் என்று CapitaLand அறிவித்துள்ளது. இந்த பாதசாரி இணைப்பு சிட்டி ஹால் MRT நிலையத்திற்கு பாதுகாப்பான பாதையை வழங்கும் என்று கேபிட்டாலேண்ட் இன்று (டிசம்பர் 20) வெளியிட்ட தனது இணையதள அறிவிப்பில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : மோசடி செய்த முன்னாள் வங்கி ஊழியர் கைது

இந்த 100 மீட்டர் பாதசாரி இணைப்பு Funan மாலின் அடித்தளம் 2-ஐ சிட்டி ஹால் MRT நிலையத்துடன் இணைக்கும் என்று கேபிட்டாலேண்ட் தெரிவித்துள்ளது. மக்களுக்கு மழை களங்களில் இது மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னதாக, 2017-ல் இருந்து ஊடக அறிக்கைகள் இந்த பாதசாரி இணைப்பு தி அடெல்பி, பெனிசுலா பிளாசா மற்றும் செயின்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல் ஆகியவற்றுடன் இணைக்கப்படலாம் என்று கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது . எவ்வாறாயினும், இன்று (டிசம்பர் 20) கேபிட்டலேண்டின் அறிக்கையில் Funan மாலுடன் எந்த கட்டிடங்கள் இணைக்கப்படும் என்பது குறித்து குறிப்பிடவில்லை. இந்த கீழ்தள வழியானது கடந்த 2020ல் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

Funan மால் சுமார் மூன்று வருட புதுப்பித்தல் பணிக்கு பிறகு கடந்த 2019ல் மீண்டும் திறக்கப்பட்டது, இது ஒரு கலப்பு-பயன்பாட்டு மேம்பாட்டிற்காக உட்புற சைக்கிள் ஓட்டுதல் டிராக் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கான Retail and Workspace-ன் கேபிட்டலேண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி, இந்த பாதசாரி இணைப்பு “உள்ளூர் கலை சமூகத்தின் படைப்புகளை காட்சிப்படுத்துவதற்கான ஒரு தளமாகவும் ஒரு “இரட்டை செயல்பாட்டை” கொண்டிருக்கும் என்றார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts